ஒரே ஒரு வார்த்தையால் வெடித்த பூகம்பம் - சங்கத்து வாட்சப் குருப்பால் முகம் சுழித்த முன்னணி நடிகர்கள் - அதிரடி காட்டிய ஹெட்..!


தாங்கள் வேலை செய்யும் இடம், நண்பர்கள், குடும்ப உறுப்பினர் என ஒரு தகவலை எல்லோரிடமும் எளிமையாக கொண்டு சேர்க்க இந்த காலத்தில் உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு விஷயம் தான் இந்த வாட்சப் க்ரூப்.

அதே போல சினிமா சங்கத்தில் இருக்கும் முக்கியமான கைகளை ஒன்றிணைக்கும் படி ஒரு வாட்சப் க்ரூப் உள்ளது. பொதுவாக, சங்கம் சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பகிர்ந்து வந்தனர். லாக் டவுனில் கையை வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாமல் சில நடிகர்கள் பிரபல நடிகை பற்றி ஒரு தகவலை பதிவு செய்ய களேபரம் ஆனது வாட்சப் க்ரூப்.

ஒன்றாக நின்று ஜெயித்து காட்டிய சங்க அணிக்கும் கடந்த ஒரு வருடமாக நடந்த பிளவுகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆளுக்கொரு காரணம் சொல்லி அந்த பக்கமும், இந்த பக்கமும் பிரிந்து போனார்கள்.

இந்நிலையில் தான் புதிதாக ஆரம்பித்துள்ளது இந்த வாட்சப் பஞ்சாயத்து. பிரபல வில்லன் மற்றும் காமெடி நடிகரான அவர் ஒரு நடிகையை பற்றி தவறுதலாக ஒரு வார்த்தையை விட்டு விட, இவருக்கு ஆதரவாக ஒரு குருப்பும், நடிகைக்கு ஆதரவாக ஒரு குருப்பும் இறங்கி பேச ஆரம்பித்து இறுதியில் குடுமி பிடி சண்டை, கொச்சை கொச்சையான வசவுகள் என கலவரம் ஆகி விட்டது.

இந்த கன்றாவிகளை பார்த்த முன்னணி நடிகர், நடிகைகள் இதெல்லாம் என்ன கன்றாவி. இப்படியெல்லாம் சண்டை போட்டுக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு. இது தொடர்ந்தால் வாட்சப் குருப்பில் இருந்து வெளியேற வேண்டி வரும் என்று சங்கத்தின் ஹெட்டுக்கு புறாவை பறக்க விட்டனர்.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட சங்கத்து ஹெட், வாட்சப் குருப்பில் அட்மின்கள் மட்டுமே செய்திகளை போஸ்ட் செய்ய முடியும் என்று அதிரடி காட்டி விட்டாராம். உங்கள் சண்டைகளை வேணும்னா தனியா குழு ஆரம்பிச்சு வச்சிகோங்க என்று கறாராக கூறி விட்டாராம்.

ஒரே ஒரு வார்த்தையால் வெடித்த பூகம்பம் - சங்கத்து வாட்சப் குருப்பால் முகம் சுழித்த முன்னணி நடிகர்கள் - அதிரடி காட்டிய ஹெட்..! ஒரே ஒரு வார்த்தையால் வெடித்த பூகம்பம் - சங்கத்து வாட்சப் குருப்பால் முகம் சுழித்த முன்னணி நடிகர்கள் - அதிரடி காட்டிய ஹெட்..! Reviewed by Tamizhakam on May 27, 2020 Rating: 5
Powered by Blogger.