என் மகளுக்கு அந்த ஆசையெல்லாம் கிடையவே கிடையாது..! - தீயாய் பரவிய தகவல் - கீர்த்தி சுரேஷின் தாய் பதில்..!


சினிமா நடிகர்கள், நடிகைகள் பற்றி அவ்வப்போது கிசுகிசு மற்றும் வந்தந்திகள் வெளியாகும். சில நேரங்களில் அவை உண்மை தான் என பிரபலங்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், பல நேரங்களில் அதற்கு மறுப்பு தெரிவித்தும், அந்த கிசுகிசுவை பார்த்து நானே சிரித்து விட்டேன் என்று கூறுவார்கள்.

மேலும், இணையதளங்களில் சினிமா நட்சத்திரங்களின் படங்கள் குறித்தும் அவர்களின் சொந்த வாழ்க்கை குறித்தும் செய்திகள் வருவது இயல்பான ஒன்று. அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதன் படி, நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தியாவின் அதிக உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியான பா.ஜ.க வில் இணையப் போகிறார் என்பதுதான். கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் பா.ஜ.க கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அத்துடன், இந்தச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் கீர்த்தி சுரேஷ் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படங்கள் சில வெளியானது. 

இந்நிலையில், இது குறித்து தற்போது கீர்த்தி சுரேஷின் தாயாரான மேனகா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசும் போது, கீர்த்தி சுரேஷ் பிரதமர் மோடியுடன் எடுத்த கொண்ட புகைப்படம் எனது கணவர் சுரேஷ் பா.ஜ.க உறுப்பினர்களைச் சந்தித்த போது எடுத்த புகைப்படம். 

என் மகள் கீர்த்தி சுரேஷுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசையெல்லாம் இல்லை எனக் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "அண்ணாத்த" படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் மகளுக்கு அந்த ஆசையெல்லாம் கிடையவே கிடையாது..! - தீயாய் பரவிய தகவல் - கீர்த்தி சுரேஷின் தாய் பதில்..! என் மகளுக்கு அந்த ஆசையெல்லாம் கிடையவே கிடையாது..! - தீயாய் பரவிய தகவல் - கீர்த்தி சுரேஷின் தாய் பதில்..! Reviewed by Tamizhakam on May 21, 2020 Rating: 5
Powered by Blogger.