"என் முகத்திற்கும்.. என் உடல் வாகிற்கும்... அது..! " - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..!


சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பெரிய திரைக்கு வந்து ஹீரோயினாக மாறி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார் ப்ரியா பவானி சங்கர். ப்ரியாவின் பெயரை கேட்டதும் அவரின் ஹோம்லி லுக் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருக்கும் ப்ரியாவுக்கு சீரியலில் நடித்துக்கொண்டிருந்த காலம் முதலே தனி ரசிகர்கள் உள்ளனர். ப்ரியா இதுவரை கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, எனக்கு கிளாமர் ஒத்து வராது.

என் முகத்திற்கும், உடல்வாகிற்கும் அது சரிபட்டு வராது என்று தெரிவித்துள்ளார். குடும்பத்து குத்துவிளக்காக ப்ரியாவை பார்த்த ரசிகர்களுக்கும் அவரை கிளாமராக பார்க்க விருப்பம் இல்லை.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் ப்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியன் 2 செட்டில் கிரேன் விழுந்து 3 பேர் இறந்த பிறகு படப்பிடிப்பை துவங்கிவில்லை. படம் இன்னும் ஓராண்டுக்கு வெளியாக வாய்ப்பில்லை.

கமல்ஹாசன் ஒரு கட்சியை நிர்வகித்து வருவதால், அடுத்த ஆண்டு தேர்தல் காரணமாக படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள வாய்ப்பில்லை. எனவே, இந்தியன் 2 படத்தை மறந்து விட வேண்டியது தான் பலரும் பேசிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில் தான், இந்தியன் 2 படம் ட்ராப் ஆகி விட்டதாக செய்திகள் வெளியாகின. இதை பார்த்த லைகா நிறுவனம் இந்தியன் 2 கைவிடப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

"என் முகத்திற்கும்.. என் உடல் வாகிற்கும்... அது..! " - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! "என் முகத்திற்கும்.. என் உடல் வாகிற்கும்... அது..! " - ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on May 27, 2020 Rating: 5
Powered by Blogger.