"சமந்தாவிடம் எந்தவொரு **-கும் இல்லை.." - கிண்டல் செய்த பூஜா ஹெக்டே..! - வெடித்த சர்ச்சை..!


தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் கடந்த பல வருடங்களாகவே முன்னணியில் இருப்பவர் சமந்தா. மேலும், தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமாகி, இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோயினா..? என்று கேலி கிண்டலுக்கு ஆளான நடிகை பூஜா ஹெக்டே-வும் தற்போது தெலுங்கில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகையாக இருக்கிறார்.

பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஸ்டோரி' பகுதியில் சமந்தாவின் சினிமா காட்சி புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு அதில், “அவரிடம் எந்த ஒரு அழகும் இல்லை” என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார்.

ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்தில் டுவிட்டர் பக்கத்தில் வந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ 'ஹேக்' செய்துவிட்டதாகவும், அதை தன்னுடைய டெக்னிக்கல் குழுவினர் சரி செய்ய உதவுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அந்த 'ஹேக்' விஷயத்தை சமந்தா ரசிகர்கள் நம்பத் தயாராக இல்லை. பூஜா ஹெக்டே சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி டிரென்ட் செய்தனர். பதிலுக்கு பூஜா ரசிகர்கள் பூஜாவுக்கு ஆதரவாக இருப்போம் என்ற ஹேஷ்டேக் உருவாக்கி பதில் டிரென்ட் செய்தனர்.இருப்பினும் அதைப் பற்றி எளிதாக எடுத்துக் கொண்ட சமந்தா, டுவிட்டரில் 'விக்டரி' சிம்பலைக் காட்டி மகிழ்ச்சியுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டார். பூஜா வேண்டுமென்றே சமந்தா பற்றி பதிவிட்டதாகவே சமந்தா ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இருவருக்கும் என்ன பிரச்சினை என்றும் அறிய சிலர் முயல்கிறார்கள் கூடிய விரைவில் குட்டு வெளிவரலாம்.

"சமந்தாவிடம் எந்தவொரு **-கும் இல்லை.." - கிண்டல் செய்த பூஜா ஹெக்டே..! - வெடித்த சர்ச்சை..! "சமந்தாவிடம் எந்தவொரு **-கும் இல்லை.." - கிண்டல் செய்த  பூஜா ஹெக்டே..! - வெடித்த சர்ச்சை..! Reviewed by Tamizhakam on May 29, 2020 Rating: 5
Powered by Blogger.