உடல் எடை ஏறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விருமாண்டி அபிராமி - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் புகைப்படம்..!


குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி நாயகியானவர் அபிராமி. சின்ன வயதிலிருந்தே கமலின் தீவிர ரசிகை. குணா படத்தில் கமல் அபிராமி அபிராமி என காதல் கொண்டு அலைந்ததை பார்த்து தனது திவ்யா என்ற பெயரை அபிராமியாக மாற்றிக் கொண்டார். 

இந்த தீவிரம்தான் விருமாண்டியில் கமல் ஜோ‌டியாக நடிக்கும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது. பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே மீடியா உலகை விட்டு விலகி அமெரிக்காவிற்குப் படிக்கப் போனார். தற்போது ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக வந்திருக்கிறார்.

சினிமாவைவிட சின்னத்திரையின் தாக்கம் இப்போது அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார் அபிராமி. சினிமாவில் கமல் வாய்ப்புக் கொடுத்தால் மறுக்கமாட்டேன் என்கிறார்.அமெரிக்காவில் சைக்காலஜி படித்துவிட்டு மிகப்பெரிய கம்பெனியில் மார்க்கெட்டிங் ஹெட் ஆக வேலை செய்திருக்கிறார் அபிராமி. அங்கு படித்து வேலை பார்த்த 5 ஆண்டுகளில் 27 நாடுகளை சுற்றிப் பார்த்திருக்கிறாராம்.

விருமாண்டி படத்தில் கமலின் நாயகி அபிராமி. அமெரிக்கா சென்று படிக்கப் போவதாக கூறிய உடன் தடுத்து அட்வைஸ் செய்தாராம். தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ள அபிராமி, கமல் மீண்டும் வாய்ப்புக் கொடுத்தால் நடிப்போன் என்கிறார். விஸ்பரூபம் முதல் பாகத்தில் நடிகை பூஜாகுமாருக்கு டப்பிங் கொடுத்தவர் அபிராமி. 

விஸ்வரூபம் பார்ட் 2-விலும் அபிராமி டப்பிங் பேசியுள்ளார். விருமாண்டி படத்தில் நடித்த அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.


ஆனால், விருமாண்டிக்குப் பிறகு அபிராமிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார். சில வருடங்களுக்குப் பிறகு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், எப்படி இருந்த அபிராமி இப்படி ஆகிட்டாரே..? என்று ஷாக் ஆகித்தான் வருகிறார்கள்.

உடல் எடை ஏறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விருமாண்டி அபிராமி - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் புகைப்படம்..! உடல் எடை ஏறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விருமாண்டி அபிராமி - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.