பிரபல சீரியல் நடிகர் விவாகரத்து..? - வேறொரு பெண்ணுடன் திருமணம்..! - நடிகையுடன் என்ன தொடர்பு..? - உண்மையை போட்டு உடைத்த நடிகர்..!


சமீப காலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. ஆடிக்கு ஒரு விவாகரத்து, அமாவாசைக்கு ஒரு விவாகரத்து என சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் வருகின்றன.

சினிமா நடிகர்கள் மட்டும் தான் விவாகரத்து செய்வார்களா...? அப்போ, நாங்க என்ன தக்காளி தொக்கா என்று கேட்கும் விதமாக சின்னத்திரை பிரபலங்களின் விவாகரத்தும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றது.

விவாகரத்து செய்து விட்டு ஆளுக்கு காரணம் சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார்கள். அது அவர்களின் சொந்த வாழ்கை என்பதால் அதற்குள் ஆழமாக செல்ல வேண்டாம் என்று மீடியாக்களும் ஒதுங்கி விடுகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் சின்னத்திரை ரசிகர்,ரசிகைகளை ஷாக் ஆக்கிய விஷயம் தெய்வம் தந்த வீடு சீரியல் பிரபலம் நடிகை மேக்னா வின்செண்ட் தன் கணவர் டான் டோனியை விவாகரத்து செய்தது தான். 

இதன் காரணம் பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வரும் மேக்னா உடன் நடிக்கும் நடிகர் விக்கியை காதிலிக்கிறார், திருமணம் செய்யப்போகிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. 

ஆனால் விக்கி இதனை முற்றிலும் மறுத்தார். அவர் சீரியலில் ஜோடியாக நடிப்பவர்கள், நிஜ வாழ்க்கையில் ஜோடியாகிவிடுவார்கள் என்று கருத்து நிலவி வருகிறது. இது தவறானது. அது போல என்னை பற்றியும் மேக்னா பற்றியும் வதந்திகள் சுற்றி வந்தன. 

நாங்கள் இருவரும் சீரியலில் இணைந்து நடித்தோம். இருவருமே நல்ல நண்பர்கள் என்பதை தாண்டி வேறெதுவும் எங்களுக்குள் இல்லை. இது குறித்து ஏற்கனவே நான் தெளிவாக கூறிவிட்டேன். 

அனைத்து குடும்பங்களிலும் இருப்பது போல என் குடும்பத்திலும் பிரச்சனை இருக்கிறது. அதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். 6 வயது மகன் எனக்கு இருக்கிறான். அவனுடைய வாழ்க்கை எனக்கு முக்கியம். அவனின் எதிர்காலம் முக்கியம். 

தயவு செய்து எங்கள் வாழ்க்கையை கெடுக்காதீர்கள் என விக்கி கூறியுள்ளார். இந்நிலையில் மேக்னாவின் முன்னாள் கணவர் டானி டோனி விவாகரத்து பெற்ற ஒரே வாரத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

பிரபல சீரியல் நடிகர் விவாகரத்து..? - வேறொரு பெண்ணுடன் திருமணம்..! - நடிகையுடன் என்ன தொடர்பு..? - உண்மையை போட்டு உடைத்த நடிகர்..! பிரபல சீரியல் நடிகர் விவாகரத்து..? - வேறொரு பெண்ணுடன் திருமணம்..! - நடிகையுடன் என்ன தொடர்பு..? - உண்மையை போட்டு உடைத்த நடிகர்..! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.