சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? - மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!


தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக உயர்ந்தவர் நடிகை மீனா. 

அதன் பின்னர் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு என அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் முன்னணி ஜோடியாக வலம் வந்தார். அடங்க ஒடுக்கமான குடும்ப பெண்ணாக இருந்தாலும் சரி, அல்ட்ரா மார்டன் லுக்கில் கலக்குவதானாலும் சரி எந்த கேரக்டருக்கும் கச்சிதமாக பொருந்தினார். 

ஒல்லியாக இருக்கும் நடிகைகள் தான் பிகினி உடை அணிய முடியும் என்ற கூற்றை 90ஸ் காலகட்டத்திலேயே உடைத்து பொசு பொசுவென இருந்த போதும் பிகினி உடை அணிந்து கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை தினரடித்தவர் நடிகை மீனா. 

அதனால் தான் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, தளபதி விஜய்யுடன் “ஷாஜகான்” படத்தில் "சரக்கு வச்சிருக்கேன்.. எறக்கி வச்சுருக்கேன்.." என ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அந்த பாட்டும் பட்டி, தொட்டி எல்லாம் செம்ம ஹிட்டானது. 

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீனா, குழந்தை பிறந்த பிறகு ஓவராக வெயிட் போட்டு குண்டானார். அதன் பின்னர் சில விளம்பர படங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘முத்து’, ‘வீரா’,‘எஜமான்’ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள மீனா, 24 வருடங்களுக்குப் பிறகு “அண்ணாத்த” படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மீனா தான் ஜோடி என்று கூறப்படுகிறது. 

சமீபத்தில், வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் மீனா. சமீபத்தில், கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த சீரியல் ஹிட் அடிக்கவே தற்போது மீண்டும் ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் வெப் சீரிஸில் நடிக்க தொடங்கியுள்ளாராம்.

இந்த வெப் சீரிஸில் போல்டான பெண்மணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது. திரைப்படங்கள் போன்று சென்சார் சங்கதி எல்லாம் வெப் சீரிஸ்களுக்கு இல்லை என்பதால் பல நடிகைகள் வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர்.

சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? 


ஏற்கனவே, இவர் நடித்திருந்த கரோலின் காமாட்சி வெப் சீரிஸில் சில காட்சிகளில் கொச்சையான கெட்ட வார்த்தைகளை பேசி நடித்திருந்தார் மீனா. சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? என்று ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

இப்போது மீண்டும் ஹீரோயின் சென்ட்றிக் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இது எப்படி இருக்க போகுதோ..? என்று முணுமுணுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.


இதற்காக கணிசமாக உடல் எடை குறைத்து மீண்டும் பழைய மீனாவாக மாறியுள்ளார். இவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? - மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! சென்சார் இல்லை என்பதற்காக இப்படியா..? -  மீனாவை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.