நீங்க தான் எங்க தலைக்கு வில்லனா..? - வாடி மாப்ளே..! - வைரலாகும் வலிமை வில்லன் "கார்த்திகேயா கும்மகொண்டா"வின் மாஸ் புகைப்படம்..!


நடிகர் அஜித் கடந்த 2019-ம் ஆண்டு விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால், இந்த வருடம் எந்த படமும் ரிலீஸ் ஆகாது என்று தான் தெரிகின்றது.

வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த "வலிமை" திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் பணி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பிய பின்னர் தான் படப்பிடிப்பை தொடர முடியும் எனவும், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனாலும் பிரச்சனை இல்லை என்று அஜித் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளாரிடம் கூறிவிட்டாராம்.

இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடித்து வரும்லுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா கட்டுடலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நீங்க தான் நம்ம தலைக்கு வில்லனா..? வாடி மாப்ளே..! என்றும் இவரு தான் வெளியூர் ஆட்டக்காரரோ..? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.நீங்க தான் எங்க தலைக்கு வில்லனா..? - வாடி மாப்ளே..! - வைரலாகும் வலிமை வில்லன் "கார்த்திகேயா கும்மகொண்டா"வின் மாஸ் புகைப்படம்..! நீங்க தான் எங்க தலைக்கு வில்லனா..? - வாடி மாப்ளே..! - வைரலாகும் வலிமை வில்லன் "கார்த்திகேயா கும்மகொண்டா"வின் மாஸ் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on May 27, 2020 Rating: 5
Powered by Blogger.