ஒரே ஒரு வீடியோ - விவாகரத்து வரை சென்ற பேட்ட பட வில்லன் மனைவி..! - தீயாய் பரவும் மோசமான காட்சிகள்..!


பிரபல பாலிவுட் நடிகர், நவாசுதீன் சித்திக். தமிழில், ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது பாலிவுட் படங்களிலும், வெப் தொடர்களிலும பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இல்லை என்பதால், நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நவாசுதீன் சித்திக்கும் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தர். 

இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவதற்காக, குடும்பத்தினருடன் உத்தரபிரதேச மாநிலம் முஸாபர்நகரில் உள்ள தனது சொந்த ஊரான, புத்தானாவுக்கு சென்றார். 

இதற்காகச் சிறப்பு அனுமதி வாங்கி இருந்தார். அங்கு சென்று சேர்ந்ததும், சுகாதாரத் துறையினர் அவர்களை சோதனை செய்தனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. 

இருந்தாலும் 14 நாள் வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து நடிகர் நவாசுதீன் சித்திக் உட்பட அவர் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இது ஒரு பக்கம் இருக்க இவரது மனைவி இவரிடம் விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக, வாட்சப் மற்றும் ஈ-மெயில் மூலமாக அவரது மனைவியின் வழக்கறிஞர் அனுப்பினார்.

இந்நிலையில், நாவாசுதின் சித்திக் தரப்பில் இருந்து அவரது மனைவி பற்றி சில தகவல்கள் வெளியாகின. அவரது மனைவி ஆலியா வேறொரு ஆணுடன் தகாத உறவில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், களத்தில் இறங்கிய ஆலியா. நாவாசுதின் சித்திக் தன்னுடைய பண பலத்தை வைத்து என் மீது பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்று கூறியிருந்தார். என் தரப்பில் இருக்கும் உண்மைகளை கூறவே நான் டிவிட்டரில் இணைந்துள்ளேன் என்னுடைய இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கருதி தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் நவாசுதின் மற்றும் அவரது குடுமப்தினர் பற்றிய தகவல்களை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், நாவசுதின் சித்திக் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது பிடிக்காமல் தான் அவரது மனைவி விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

வெப் சீரிஸ் ஒன்றில் தன்னுடன் நடிக்கும் நடிகை ஒருவருடன் உறவு கொள்வது போன்ற ஒரு காட்சியில் நடித்துள்ள நவாசுதின் சித்திக்கின் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

ஒரே ஒரு வீடியோ - விவாகரத்து வரை சென்ற பேட்ட பட வில்லன் மனைவி..! - தீயாய் பரவும் மோசமான காட்சிகள்..! ஒரே ஒரு வீடியோ - விவாகரத்து வரை சென்ற பேட்ட பட வில்லன் மனைவி..! - தீயாய் பரவும் மோசமான காட்சிகள்..! Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.