"முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வைத்திருப்பவர்கள் எல்லாம் உ**** ம***" என கூறி சில மணி நேரத்தில் பதிவை நீக்கிய திரிஷா..!


தமிழில் நடிகர் அஜித்தின் ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் ராணா. பாகுபலி பல்லால தேவனாக மிரட்டினார். அதனை தொடர்ந்து, இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தார்.

இவரும் நடிகை த்ரிஷாவும் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாயின. ராணா, சென்னை வந்தால் த்ரிஷாவின் வீட்டில் தான் தங்குவார். சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்த சினிமா விழாக்களுக்கு ஒன்றாகவே இருவரும் சென்று வந்தனர்.

ஆனால், தாங்கள் நண்பர்கள்தான் என்றும் காதலிக்கவில்லை என்றும் நடிகர் ராணா கூறி வந்தார். இந்நிலையில் ஒரு பேட்டியில், "பத்து வருடத்துக்கும் மேலாக திரிஷா எனக்கு நல்ல தோழியாக இருந்தார். எனது நீண்ட நாள் தோழி அவர். குறைந்த காலம் இருவரும் காதலித்தோம். பின்னர் இது சரியாக இருக்காது என்று நினைத்ததால் அதை முடித்துக்கொண்டேன்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து இவர்கள் பற்றி வந்த கிசு கிசு உண்மைதான் என்று தெரிய வந்தது. கமுக்கமாக இருந்து விட்டு இரண்டு பேரும் காதலித்து வந்துள்ளார்கள் பாரேன் என்று தெலுங்கு மீடியாவில் விவாதங்கள் பறந்தன.

இந்த விவகாரம் நடந்து முடிந்து வருடங்கள் ஆகி விட்ட நிலையில், சமீபத்தில் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை வெளியிட்டு இவர் என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டார் என்று கூறியிருந்தார் நடிகர் ராணா.

பொதுவாக, சினிமா நட்சத்திரங்கள் யாரவது கமிட்டாகி விட்டால் முதல் ஆளாக வந்து வாழ்த்து சொல்லும் நடிகை திரிஷா, தன்னுடைய நெருங்கிய நண்பரான ராணாவின் இந்த பதிவிற்கு வாழ்த்து எதுவும் சொல்ல வில்லை.

அட வாழ்த்து எதுவும் சொல்ல வில்லை என்றால் பரவாயில்லை. ஆனால், "முன்னாள் காதலியை இந்நாள் நண்பர்களாக வைத்திருப்பவர்கள் "அந்த" உறவிற்காக அவளது உடலை மட்டுமே நேசிக்கும் மனநோயாளிகள் (narcissistic psychopath)" என்று ஒரு பதிவை வெளியிட்டு "இது எனக்கு தெரியும்" என கூறியிருந்தார்.


இதனை பார்த்த பலரும் ராணா-வை தான் இப்படி சொல்கிறார் போல என்று கருத்து தெரிவிக்க உடனடியாக அந்த பதிவை நீக்கியுள்ளார் திரிஷா.

"முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வைத்திருப்பவர்கள் எல்லாம் உ**** ம***" என கூறி சில மணி நேரத்தில் பதிவை நீக்கிய திரிஷா..! "முன்னாள் காதலியை இந்நாள் தோழியாக வைத்திருப்பவர்கள் எல்லாம் உ**** ம***" என கூறி சில மணி நேரத்தில் பதிவை நீக்கிய திரிஷா..! Reviewed by Tamizhakam on May 27, 2020 Rating: 5
Powered by Blogger.