கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க..? - ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்த நடிகை கஸ்தூரியின் பரிதாப நிலை..!


தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு. 

அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள். 

ஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார். இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி, இந்த கொரோனா காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது.

இணையதளத்தில் வெறும் கருத்து மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார் சமுத்திரகனி படம் போல டாக்குமெண்டரி ஆகிவிடும் என்பதால் அவ்வப்போது சுந்தர்.சி படம் போல கவர்ச்சியையும் இடை இடையில் கோர்த்து விட்டு, ராஜேஷ் படம் போல காமெடியையும் சேர்த்து விட்டு ஒரு பக்கா கமர்ஷியல் ஆக்டிவிஸ்டாக இணையத்தில் வலம் வருகிறார் அம்மணி. 


அந்த வகையில், இப்போது நடுத்தெரு என்ற தெருவிற்கு வந்து பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார் கஸ்தூரி. இதனை பார்த்த நெட்டிசன்கள் கொஞ்ச நஞ்ச ஆட்டமாபோட்டீங்க..? இப்போ பாருங்க ஒரே நைட்ல நடுத்தெருவுக்கு வந்துட்டீங்க..! என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க..? - ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்த நடிகை கஸ்தூரியின் பரிதாப நிலை..! கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க..? - ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்த நடிகை கஸ்தூரியின் பரிதாப நிலை..! Reviewed by Tamizhakam on May 25, 2020 Rating: 5
Powered by Blogger.