"இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. - ஹீரோக்களை போய் கேளுங்க.." - சாட்டை சுழற்றும் நடிகை தமன்னா..!


முன்னணி சினிமா நடிகைகள் சமீப காலமாக கோடிகளில் புரளுகிறார்கள். அந்த வகையில், ஒரு பாடலுக்கு படங்களில் ஆடினாலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா. 

இந்நிலையில், தெலுங்கில் ரவி தேஜா உடன் ஒரு படத்தில் நடிக்க மூன்று கோடி சம்பளம் கேட்டதாகவும். தயாரிப்பளார் தர மறுக்கவே படத்தில் நடிக்க முடியாது என மறுத்ததாகவும் செய்தி வெளியானது. 

இது குறித்து தமன்னா கூறுகையில், என்னைப் பற்றி பல கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. இப்படம் தொடர்பாக பட நிறுவனமும் பேசியது உண்மை தான். ஆனால் கொரோனா ஊரடங்கால் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. 

ரவி தேஜா உடன் நல்ல நட்பு உள்ளது. அவரை ஒதுக்க வேண்டிய அவசியம் கிடையாது. நடிகர்களின் சம்பளம் அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்பதெல்லாம் தவறு. இதனை ஏற்க முடியாது. 

இது ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை. ஹீரோக்களை போன்றே நாயகிகளும் படத்துக்கு முக்கியமாக தேவை. அதனால் அவர்கள் ஏன் அதிக சம்பளம் வாங்க கூடாது. ஹீரோக்கள் மட்டும் தான் வாங்க வேண்டுமா என்ன? என்று சாட்டைசுழற்றுகிறார்.

"இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. - ஹீரோக்களை போய் கேளுங்க.." - சாட்டை சுழற்றும் நடிகை தமன்னா..! "இதெல்லாம் ரொம்ப தவறுங்க.. - ஹீரோக்களை போய் கேளுங்க.." - சாட்டை சுழற்றும் நடிகை தமன்னா..! Reviewed by Tamizhakam on May 20, 2020 Rating: 5
Powered by Blogger.