"இவர் தான் என்னுடைய பார்ட்னர்.." - புஜத்தை உயர்த்தி காட்டும் அஞ்சலி - வைரலாகும் வீடியோ..!


ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில் தெலுங்கு திரையுலகிற்கு நடிக்க சென்றார். இதற்கு பின்னர் இவரது வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகள் ஏற்பட்டது. 

இவரது சொந்த குடும்பத்து பிரச்சனை மற்றும் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் கசமுசா என சில பிரச்சனைகள் மின்னல் வேகத்தில் இவரது வாழ்க்கைக்குள் நுழைந்து சென்றன. 

இந்த பிரச்சனைகள் சரியான பின்னர் சிங்கம் திரைப்படத்தில் பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட நிலையில் சிறிது கால இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் நடிக்க துவங்கினார். 

பொசு பொசுவென Chubby-ஆக இருந்த இவர் தற்போது உடல் எடை குறைச்சு ஒல்லிப்பிச்ச்சனாகி விட்டார். இது அவரது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இநிலையில், இயக்குனர் ஜெயராஜ் இயக்கத்தில் அஞ்சலி ஹீரோயின் சப்ஜெட் படம் ஒன்றில்  நடிக்க உள்ளார். 

இந்த படத்தில் ஹீரோயினாக வரும் நடிகை அஞ்சலியை ஒருதலையாக காதலிக்கும் ரோமியோக்களாக ராமர் மற்றும் யோகி பாபு ஆகியோர் வருகின்றனர்.

கொரோனாலாக் டவுன் முடிந்ததும் இந்தபடத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கபடுகின்றது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி எப்போது அடக்க ஒடுக்கமான புகைப்ப்டங்களை மட்டுமே வெளியிடுவார்.

ஆனால், சமீபத்தில் கவர்ச்சியான புகைப்படங்களைவெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது " எங்கள் ஞாயிறு இப்படிதான் இருக்கும்" என கூறி தன்னுடைய நாயுடன் இருக்கும் வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்து முடித்த அவர் தன்னுடைய புஜத்தை உயர்த்தி காட்டுவது போல அவரது நாயும் அதற்கேற்றார் போல தலையை அசைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்தநாயின் பெயர் போலோ-வாம். போலா தான் என்னுடைய உடற்பயிற்சி பார்ட்னர் எனவும் அவர் மிகவும் ஸ்ட்ரிக்டானவர் என்று சிலாகித்துள்ளார் அஞ்சலி.

இதோ அந்த வீடியோ,

"இவர் தான் என்னுடைய பார்ட்னர்.." - புஜத்தை உயர்த்தி காட்டும் அஞ்சலி - வைரலாகும் வீடியோ..! "இவர் தான் என்னுடைய பார்ட்னர்.." - புஜத்தை உயர்த்தி காட்டும் அஞ்சலி - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 24, 2020 Rating: 5
Powered by Blogger.