ரசிகர்கள் செய்த வேலை - கடும் கோபத்தில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்ட பிரியா பவானி சங்கர்..!


தமிழ் சினிமாவில் தற்போதைய சூழலில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என்று பெயர் எடுத்துவிட்டால் போதும் அந்த நடிகையை எப்படியாவது தங்கள் படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள்.

ஒரு காலத்தில் நடிகை லக்ஷ்மி மேனனை சுற்றி வந்த தயாரிப்பாளர்கள். இப்போது, ப்ரியா பவானி ஷங்கரை சுற்றி வருகிறார்கள். தற்போது மட்டும் அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார் அம்மணி.

நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாண் உடன் பெலி சூப்புலு தெலுங்கு பட ரீமேக், அதர்வாவின் குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசடதபற , ஜீவாவின் களத்தில் சந்திப்போம் என ஒரு பெரிய லிஸ்ட்டே பிரியா பவானி சங்கர் கைவசம் இருக்கிறது.

இதுதவிர அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல், விஷாலை வைத்து இயக்கும் புதிய படத்தில் பிரியா தான் ஹீரோயின். ராகவா லாரன்ஸ் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படி படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியாவின் முக்கிய பொழுதுபோக்கு சமூலவலைதளங்களில் ரசிர்களுடன் உரையாற்றுவது தான்.

இதன் மூலம் ரசிகர்களுடன் நெருக்கத்தை கடைப்பிடித்து வருகிறார். ஆனால் அது சில நேரம் அவருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சமீபத்தில் ஒரு சமூக பிரச்சினை தொடர்பாக பிரியா வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சண்டை போட்டார்.

இதனால் கோபமடைந்த பிரியாவின் ரசிகர்கள், அந்த பெண்ணை கண்டப்படி திட்டினர். இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரியா, "சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு நான் நாகரிகமான முறையில் பதிலளித்தேன். என்னை போலவே அந்த பெண்ணிற்கு நாகரிகமாக பதில் அளித்தவர்களுக்கு எனது நன்றி.

ஆனால் சிலர் அந்த பெண் மீது அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஆதரவாக பேசுவதற்காக மற்றொருவரை மோசமாக பேசுவதை நான் விரும்பவில்லை. ஒருவரை அசிங்கமாக பேசி, அவரது கருத்து சுதந்திரத்தை பறிப்பது சரியான செயல் அல்ல.


ஒரு விஷயத்தை நாகரிகமாக சொல்ல நமக்கு தெரியவில்லை என்றால், அது பற்றி கருத்து சொல்ல நமக்கு எந்த உரிமையும் இல்லை. அதற்கு கருத்து சொல்லாமலேயே இருக்கலாம்", என மிகவும் காட்டமாக பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

ரசிகர்கள் செய்த வேலை - கடும் கோபத்தில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்ட பிரியா பவானி சங்கர்..! ரசிகர்கள் செய்த வேலை - கடும் கோபத்தில் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்ட பிரியா பவானி சங்கர்..! Reviewed by Tamizhakam on May 31, 2020 Rating: 5
Powered by Blogger.