லிஃப்டில் வைத்து "அந்த இடத்தில் தவட்டுமா..?" என்று கேட்டார் - பிரபல தமிழ் நடிகர் மீது புகார் கூறிய ராதிகா அப்தே..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!


தமிழில், வெற்றிச்செல்வன், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பிரபல பாலிவுட் நடிகை, ராதிகா ஆப்தே. 

சினிமா துறையில் பாலியல் தொல்லைகள், ஹீரோ ஆதிக்கம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசும் ராதிகா ஆப்தே, தமிழ் சினிமா ஹீரோ மீது பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, தமிழில் ஒரு படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஹீரோ என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் தமிழில் பெரிய நடிகரும் கூட. இதற்கு முன் அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. 

அவர், என்னுடைய பாதங்களை அவர் வருடியதும் கோபத்தில் ஓங்கி அறைந்துவிட்டேன் என்று கூறியிருந்தார். பொதுவாக எந்த விஷயமாக இருந்தாலும் கூலாக பதில் சொல்லும் ராதிகா ஆப்தே. இந்த விஷயத்தில் காட்டிய கோபம் பலரையும் அதிர்ச்சிகுள்ளாகியது. 

இந்நிலையில் இன்னொரு பரபரப்பு புகார் ஒன்றை இப்போது தெரிவித்துள்ளார். ’சமீபத்தில் எனக்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றை பகிர்ந்துகொள்கிறேன். படப்பிடிப்பில் எனக்கு முதுகுபக்கத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. வலியால் தவித்தேன். ஷூட்டிங் முடிந்த பின் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். ஹோட்டல் லிஃப்டில் ஏறினேன். 

அதே லிஃப்டில் அந்தப் படத்தில் என்னுடன் நடித்த நடிகரும் வந்தார். நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். ஒன்றாக நடித்தாலும் அவருடன் நான் பேசிக்கொண்டதில்லை. அவர் திடீரென்று என்னிடம் அத்துமீறி பேசினார். உங்களுக்கு, நைட்ல ஏதாவது உதவி வேணும்ன்னா சொல்லுங்க. நான் வேணா உங்க முதுகை தடவி விடட்டுமா’ என்று மோசமான தொணியில் கேட்டார். 

இதனால் அதிர்ச்சி அடைந்தேன். இதன் மூலம் அந்த நடிகர் என்னை சங்கடமான நிலைக்கு தள்ளியது பற்றி உணரவே இல்லை. பின்னர் நான் தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர்கள் அந்த நடிகரிடம் பேசினார்கள். பிறகு அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

படங்களில் ஆடையின்றி நடிக்கிறீர்களே..? ஏன்..? என்று கேட்ட போது, நானும் என் குடும்பமும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி இன்றி இருந்த போது யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அப்போது, கண்டு கொள்ளாதவர்கள், இப்போது கேள்வி கேட்க மட்டும் வந்து விடுகிறார்கள் என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்த ராதிகா அப்தேவா இப்படி காட்டமாக பேசியிருப்பது என ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள் ரசிகர்கள்.

லிஃப்டில் வைத்து "அந்த இடத்தில் தவட்டுமா..?" என்று கேட்டார் - பிரபல தமிழ் நடிகர் மீது புகார் கூறிய ராதிகா அப்தே..! - ரசிகர்கள் அதிர்ச்சி..! லிஃப்டில் வைத்து "அந்த இடத்தில் தவட்டுமா..?" என்று கேட்டார் - பிரபல தமிழ் நடிகர் மீது புகார் கூறிய ராதிகா அப்தே..! - ரசிகர்கள் அதிர்ச்சி..! Reviewed by Tamizhakam on May 21, 2020 Rating: 5
Powered by Blogger.