சன் + தா + நம் = வெளியானது சந்தானம் நடிக்கு "டிக்கிலோனா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..! - இதோ போஸ்டர்..!


ஒரு காலத்தில் வருடத்திற்கு 10, 15 படங்களில் காமெடியனாக வலம் வந்துகொண்டிருந்த சந்தானம் தற்போது நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறார்.

மேலும், சந்தானத்தின் படங்கள் பெரிய லாபம் தராவிட்டாலும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அவரும் தன் போக்குக்கு புதுப்படங்களில் நாயகனாக நடித்து அசத்தி வருகிறார்.

எந்த நடிகரும் எடுத்த எடுப்பில் பெரிய ஹீரோ ஆகிவிடவில்லை. அப்படி ஹீரோ ஆனவர்கள் ஹீரோவாக நிலைத்தது இல்லை. சந்தானமும் ஒரு நாள் மாஸ் ஹீரோவாக வந்தே தீருவார் என்கிறார்கள் சினிமா வட்டரதினர்.

தற்போது கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ‘டிக்கிலோனா’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் சந்தானம். இதில் அவரது ஜோடியாக அனகா, ஷிரின் ஆகிய இருவர் நடித்துள்ளனர்.

மேலும் யோகிபாபு, ஆனந்தராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன் என பெரிய நகைச்சுவைப் பட்டாளமே களம் இறங்குகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் முக்கிய வேடம் ஏற்றுள்ளாராம். இதனால் படத்துக்கு கூடுதல் விளம்பரம் கிடைத்துள்ளது.

“முதன்முறையாக சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இப்படம் முழுவதும் நகைச்சுவையும் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதனால் படத்தின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது,” என்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.

இந்நிலையில், சற்று முன்பு இந்த படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ அந்த போஸ்டர்,சன் + தா + நம் = வெளியானது சந்தானம் நடிக்கு "டிக்கிலோனா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..! - இதோ போஸ்டர்..! சன் + தா + நம் = வெளியானது சந்தானம் நடிக்கு "டிக்கிலோனா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..! - இதோ போஸ்டர்..! Reviewed by Tamizhakam on May 27, 2020 Rating: 5
Powered by Blogger.