"டாக்டர் அப்டேட் தாடா.." - மரியாதை இல்லாமல் அப்டேட் கேட்ட ரசிகருக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பதிலை பாருங்க..!


நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' திரைப்படம் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டால், கிருஸ்துமஸ் விடுமுறை தினமான டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரையுலகில் நடிகர் ஒருவரின் படத்தின் தொலைக்காட்சி உரிமை படம் வெளியீட்டுக்கு முன்னரே விற்பனையாகிறது என்றால் அது விஜய், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் படமாகத்தான் இருக்கும் என்று திரை உலக வணிகர்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது படங்களுக்கு குடும்ப பெண்கள் ரசிகர்கள் அதிகம். அவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான் என இரண்டு திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இதில் 'கோலமாவு கோகிலா' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'டாக்டர்'.

இந்தப் படத்தின் 90% காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் 10 சதவீத காட்சிகளை, கோவாவில் படமாக்கப்பட வேண்டும். தற்போது கோவா மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழக அரசு அனுமதி வழங்கியவுடன் விரைவில் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்றும், நவம்பர் மாதத்திற்குள் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டால், டிசம்பர் மாதத்தில் இப்படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனிடையே, இந்த படத்தை தயாரித்துவரும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனத்திடம் டாக்டர் படத்தின் அப்டேட் தாடா.. என்று மரியாதையில்லாமல் ஒருமையில் கேட்ட ரசிகருக்கு தயாரிப்பு நிறுவனம் பதில் கொடுத்துள்ளது.

அதில், படத்தின் அப்டேட் கேக்குறது ஈசி. ஆனால், குடுக்குறது கஷ்டம்.லாக்டவுன் முடிஞ்சதும் எஞ்சிய படப்பிடிப்பை முடிக்க காத்திருக்கிறோம். லாக்டவுன் முடிஞ்சதும் அப்டேட் அல்லும் பாருங்க.." என்று அந்த ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளது KJR ஸ்டூடியோஸ்.


"டாக்டர் அப்டேட் தாடா.." - மரியாதை இல்லாமல் அப்டேட் கேட்ட ரசிகருக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பதிலை பாருங்க..! "டாக்டர் அப்டேட் தாடா.." - மரியாதை இல்லாமல் அப்டேட் கேட்ட ரசிகருக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த பதிலை பாருங்க..! Reviewed by Tamizhakam on May 30, 2020 Rating: 5
Powered by Blogger.