வேறு மதத்தை சேர்ந்தவரை 3-வதாக திருமணம் செய்யும் வனிதா - மாப்பிள்ளை இவர் தான்..! - வைரலாகும் புகைப்படம்..!



நடிகர் விஜய் நடித்து 1995ம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா விஜயகுமார். அதன்பின் மாணிக்கம் படத்தில் நாயகியாக நடித்தார்.

இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடாத காரணத்தால் அவர் சினிமாவை விட்டு விலகினார். 2000ம் ஆண்டில் நடிகர் ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட வனிதா, 2007ம் ஆண்டில் அவரை விவகாரத்து செய்தார்.

பின்னர் அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, 2010ல் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் நடன இயக்குனர் ராபர்ட்டுடன், வனிதா லிவிங் டு கெதர் ஆக வாழ்ந்ததாக சொல்லப்பட்டது.

அடுத்து அவரை விட்டும் பிரிந்தார் வனிதா. சினிமா ஹீரோயினாக வனிதாவை தெரிந்ததைவிட கடந்த வருடம் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக வனிதாவைத் தெரிந்தவர்கள் அதிகம். அந்த நிகழ்ச்சியில் தனது அதிரடியான குணம் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டார் வனிதா.

முதல் கணவர் மூலம் ஒரு மகன், ஒரு மகள், இரண்டாவது கணவர் மூலம் ஒரு மகள் என மூன்று குழந்தைகள் வனிதாவிற்கு உள்ளனர். இந்நிலையில் இந்த மாதம் வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக கோலிவுட்டில் செய்திகள் வெளியான நிலையில் இப்போது அது உண்மையாகி உள்ளது.


வனிதா மூன்றாவதாக திருமணம் செய்ய இருக்கும் நபர் ஒரு கிருத்துவராம். அவரது பெயர் பீட்டர் பால். கொரோனா ஊரடங்கு என்பதால் மிக நெருங்கிய நண்பர்கள் உறவினர்களை மட்டுமே அழைத்து திருமணம் செய்ய இருக்கின்றனர். இவர்களது திருமணம் வருகிற 27ம் தேதி, வனிதாவின் இல்லத்தில் நடைபெறுகிறது.

வேறு மதத்தை சேர்ந்தவரை 3-வதாக திருமணம் செய்யும் வனிதா - மாப்பிள்ளை இவர் தான்..! - வைரலாகும் புகைப்படம்..! வேறு மதத்தை சேர்ந்தவரை 3-வதாக திருமணம் செய்யும் வனிதா - மாப்பிள்ளை இவர் தான்..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 17, 2020 Rating: 5
Powered by Blogger.