"என்னை இவர்கள் வி*** என்று அழைக்கிறார்கள்" - பகிரங்கமாக புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..!


பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆங்காங்கே இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அண்மையில் நாகர்கோவிலில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியாக்கியது.

காசி என்ற என்ற இளைஞர் பள்ளிப் பெண்கள், கல்லூரி பெண்கள், டாக்டர், இன்ஜினியர் என இளம் பெண்களை குறித்து காதல் செய்து தன் இச்சைக்கு அவர்களை ஆளாக்கி வீடியோ எடுத்து பணம் பறித்து வந்ததாக புகார் கூறப்பட்டு வந்தது.

போலிஸ் புகார் செல்லும் முன்பே பாடகி சின்மயியிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் புகார் அளித்ததாகவும், இது குறித்து சின்மயி முன்பே பதிவிட்டுருந்ததாவும் கூறியிருந்தார். இந்நிலையில் அண்மையில் சில பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் சின்மயி சைபர் குற்றங்களை மட்டும் கவனிக்க வேண்டும் என்றால் சில ஆண்கள் எங்களுக்கு எதிராக பேசியும், புகைப்படங்களையும் அனுப்பியது குறித்தும் நாங்கள் அளித்த புகார் என்ன ஆனது என கேட்டு பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில், தற்போது நான்கு மாணவர்களின் புகைபடங்களை அப்லோட் செய்து, என்னை பலரும் விபச்சாரி என்று அழிகிறார்கள். நான் ஒரு விபச்சாரி என்று அழைக்கப்படுவது பழக்கமாகிவிட்டது; சமூக ஊடக தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை ஒரு சேரி என்று அழைத்தவர்கள் ஆண்கள். பல இழிவான கருத்துகளும் ஆண்களிடமிருந்து வந்தவை. ‘எல்லா ஆண்களும் குப்பை' அல்லது ‘ஆண்கள் குப்பை' என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது.

மேலும், தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சின்மயி. தெலுங்கு படிக்க தெரிந்தால் உங்களுக்கு புரியும் என்று குறிப்பிட்டு தன்னை திட்டியவர்களின் போட்டோக்களோடு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள நான்கு மாணவர்களின் புகைப்படத்தில் ஒருவர் விஸ்வபாரதி மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மருத்துவ கல்லூரி மாணவர் என்றும் மற்ற மூவரும் பட்டதாரிகள் அல்லது பட்டதாரி மாணவர்கள் என்றும் கூறியுள்ளார்.


"என்னை இவர்கள் வி*** என்று அழைக்கிறார்கள்" - பகிரங்கமாக புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..! "என்னை இவர்கள் வி*** என்று அழைக்கிறார்கள்" - பகிரங்கமாக புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..! Reviewed by Tamizhakam on June 01, 2020 Rating: 5
Powered by Blogger.