தற்கொலை செய்யப்போவதை ஒரு வாரத்திற்கு முன்பே சூசகமாக கூறிய சுஷாந்த்..! - கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

34 வயதான அவரின் இந்த முடிவு திரை உலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் திரைப்பிரபலங்கள் பலரும் இது உண்மை தானா? நம்ப முடியவில்லை என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே சுஷாந்த் சூசமாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


ஆம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் ஹெட்டரை மாற்றி புதிய புகைப்படம் ஒன்றை வைத்துள்ளார் சுஷாந்த். இந்த புகைப்படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா..? அது தான் விஷயமே..! கீழே உள்ள ஸ்க்ரீன் ஷாட்டை பாருங்க..இந்த ஹெட்டரில் உள்ள புகைப்படம் டச்சு-வை சேர்ந்த "வின்சென்ட் வேன் கோஹ்" என்பவரால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை, கடந்த ஜூலை 27,ம் தேதி 1890-ம் ஆண்டு வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரையும் போது கடுமையான மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த ஓவியத்தை வரைந்து முடிந்த பின் ஓவியத்தின் பெயின்ட் காய்வதற்குள் தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் இந்த வின்சென்ட் வேன் கோஹ்.

இதன் மூலம் தான் கடுமையான மனஅழுத்தத்தில் இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளப்போவதையும் சூசகமாக முன்கூட்டியே தெரிவித்துள்ளார் சுஷாந்த் என்று ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

தற்கொலை செய்யப்போவதை ஒரு வாரத்திற்கு முன்பே சூசகமாக கூறிய சுஷாந்த்..! - கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..! தற்கொலை செய்யப்போவதை ஒரு வாரத்திற்கு முன்பே சூசகமாக கூறிய சுஷாந்த்..! - கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 14, 2020 Rating: 5
Powered by Blogger.