சுஷாந்த் சிங் தற்கொலை - முன்னாள் காதலி என்ன சொல்லியிருக்கார் பாருங்க..! - கடும் கோபத்தில் ரசிகர்கள்..!


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் சற்று முன் தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சி செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளி வந்தாலும் அவரது தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பை போலீசார் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார். மும்பை போலீசார் அவரது மரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதுவரை எந்த விதமான கடிதமும் கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் சிங்-ன் ரசிகர்கள் பலரும் அவரது முன்னாள் காதலியான அங்கீதா என்பவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நீ ஒரு ரத்தக்காட்டேரி என்றும் உன்னால் தான் சுஷாந்த் இறந்து விட்டார் என்று கூறி வருகிறார்கள். அவர் இறந்த செய்தி அறிந்த ரசிகர்கள் இவரது மரணம் குறித்து ஏதேனும் கூறியுள்ளாரா என்று பார்க்க அவரது சமூக வலைதளங்களில் தேடினார்கள்.


ஆனால், இதுவரை அவர் எந்த ஒரு ரியாக்ஷனும் கொடுக்கவில்லை. இதனால், கடுப்பான ரசிகர்கள் அவரை சகட்டு மேனிக்கு திட்டி வருகிறார்கள். மேலும், சிலர் அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக இவரை திட்டி என்ன பயன். சூழ்நிலையை மேலும் மோசமாக்காதீர்கள் என்றும் கூறிவருகிறார்கள்.

சுஷாந்த் சிங் தற்கொலை - முன்னாள் காதலி என்ன சொல்லியிருக்கார் பாருங்க..! - கடும் கோபத்தில் ரசிகர்கள்..! சுஷாந்த் சிங் தற்கொலை - முன்னாள் காதலி என்ன சொல்லியிருக்கார் பாருங்க..! - கடும் கோபத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 14, 2020 Rating: 5
Powered by Blogger.