சுஷாந்த் சிங் தற்கொலை இது தான் காரணம்..? - வாரிசு நடிகை ஆலியா பட்-ஐ கிழி கிழி என கிழிக்கும் ரசிகர்கள்..! - அதிர்ச்சி தகவல்கள்..!


ஒட்டு மொத்த இந்திய திரையுலகமும் நேற்று அதிர்ந்து தான் போனது. இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து பலரும் மீண்டு வரவில்லை. இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று (ஜுன் 14) மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டார்.

அவரது தற்கொலைக்கு கடுமையான மனஅழுத்தம் தான் காரணம் என முதல் கட்டத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இன்று காலையிலிருந்து டுவிட்டரில் இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஆரம்பமாகி உள்ளன.

ஆம், பீகார் மாநிலத்தில் சாதாரண குடும்பத்தில் இருந்து நன்றாகப் படிக்கும் திறமை கொண்ட சுஷாந்த், மும்பை சென்று தன்னை முக்கிய ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார்.

அவரது வளர்ச்சி பிடிக்காத சில பாலிவுட் சினிமா பிரபலங்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க மறுத்ததாகவும், வாரிசு நடிகர்கள், நடிகைகள் சிலருக்கு அவருடைய வளர்ச்சி பிடிக்கவில்லை என்றும் பல ரசிகர்கள் டுவிட்டரில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதற்கு உதாரணமாக 'காபி வித் கரண்' என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை ஆலியா பட்டிடம், “சுஷாந்த் சிங் ராஜ்புட், ரன்வீர் சிங், வருண் தவான் ஆகிய மூவரை பற்றியும் ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்,” என கேட்கப்பட்டது. சிறிது நேரம் யோசித்த ஆலியா பட் 'Who is Sushanth Singh..?' என கிண்டலாகப் பதிலளித்த வீடியோவை தற்போது டுவிட்டர்வாசிகள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

அன்று தொலைகாட்சி நிகழ்ச்சியில் சுஷாந்தைப் பற்றி எதுவும் தெரியாதபடி கிண்டலடித்துவிட்டு இன்று அவருடைய மறைவுக்காக கரண் ஜோஹர், ஆலியா பட் இருவரும் வருத்தம் தெரிவிப்பது பொருத்தமாக இல்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.

கரண் ஜோஹர், ஆலியா பட் இருவரும் இந்த காரணத்தால் இன்று டுவிட்டரில் டிரென்டிங்கில் இருக்கிறார்கள். சினிமாவிலும் வாரிசு அரசியல் தான் சுஷாந்த் சிங் ராஜ் புட் தற்கொலைக்குக் காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது தற்போது கடும் சர்ச்சைகளை ஆரம்பித்து உள்ளது. மேலும், சுஷாந்த் தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சுஷாந்த் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

இதை உண்மையாக்குவது போன்று சுஷாந்த் சிங்கின் தோழியும், ஸ்டைலிஸ்ட்டுமான சப்னா கூறியுள்ள கருத்தும் ஒத்துப்போகின்றது. கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் அனுபவித்த கஷ்டங்களில் எந்த ரகசியமும் இல்லை. சினிமாவில் இருக்கும் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்கவும் இல்லை, அவருக்கு உதவ கைகொடுக்கவும் இல்லை.

நிஜமாகவே சினிமாத்துறை எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதற்கு இன்று வரும் டுவீட்களே சாட்சி. இங்கே, யாரும் உங்களுக்கு நண்பன் இல்லை என பதிவிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலை இது தான் காரணம்..? - வாரிசு நடிகை ஆலியா பட்-ஐ கிழி கிழி என கிழிக்கும் ரசிகர்கள்..! - அதிர்ச்சி தகவல்கள்..! சுஷாந்த் சிங் தற்கொலை இது தான் காரணம்..? - வாரிசு நடிகை ஆலியா பட்-ஐ கிழி கிழி என கிழிக்கும் ரசிகர்கள்..! - அதிர்ச்சி தகவல்கள்..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.