ரிப்பன் நடிகை சினிமாவில் இருந்து ஓரங்கட்ட காரணம் இந்த வாரிசு நடிகர் தானாமே...! - அட பாவமே..!


குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்த அந்த ரிப்பன் நடிகை தொலைக்காட்சி நடிகருடன் பர்ப்பிள் வண்ண ரிப்பன் கட்டி நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.

இந்த பொண்ணு தமிழ் சினிமாவில் எங்கேயோ போகப்போகுது என்றார்கள். ஆனால், அடுத்தடுத்து நடித்த படங்களில் அவரது ஸ்கோப் குறைந்து கொண்டு வந்தது. ஆனாலும், பட வாய்ப்புக்கு பஞ்சம் இல்லாமல் தான் நடித்து வந்தார்.

வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்கள் நடித்து வந்த இவர் திடீரென சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதற்கு காரணம், இவர் கவர்ச்சியாக நடிக்க மறுத்தது தான் என்று கூறினார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். வரிசையாக படம் பிளாப் ஆனாலும் தொடர்ந்து படம் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய இடத்து வாரிசு நடிகர் ஒருவர் அவருடைய படத்தில் அவருக்கு ஜோடியாக ரிப்பன் நடிகையை நடிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், நடிக்க முடியாது என திட்ட வட்டமாக மறுத்துவிட்டாராம் ரிப்பன் நடிகை.

இதனால், கடுப்பான அவர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் அந்த நடிகையை இனி எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்ய கூடாது என்று மறைமுகமாக அந்த நடிகைக்கு ரெட் கார்டு போட்டு வைத்துள்ளாராம்.

அந்த நடிகைக்கு மாற்றாக வேறு நடிகைகள் இதுவரை இல்லை என்றாலும் வேறு வழியில்லாமல் புதுமுக நடிகைகளை ஹீரோயினாக நடிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்களாம் இயக்குனர்கள்.

எதிர்வரும், சட்ட மன்ற தேர்தலின் முடிவை பொருத்து தான் அந்த நடிகை மீண்டும் சினிமாவில் என்ரட்றியாவதும், அப்படியே காணாமல் போவதும் என்று பாவமாக பார்கிறார்கள் விவரம் அறிந்த கோலிவுட் புள்ளிகள்.

ரிப்பன் நடிகை சினிமாவில் இருந்து ஓரங்கட்ட காரணம் இந்த வாரிசு நடிகர் தானாமே...! - அட பாவமே..! ரிப்பன் நடிகை சினிமாவில் இருந்து ஓரங்கட்ட காரணம் இந்த வாரிசு நடிகர் தானாமே...! - அட பாவமே..! Reviewed by Tamizhakam on June 14, 2020 Rating: 5
Powered by Blogger.