"ஒருவேளை இன்னிக்கு நீங்க இதை பண்னலனா... நான் என்னோடத தரேன்.." - ப்ரியா பவானி ஷங்கர் லந்து..!
மேயாத மான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி ஷங்கர்.அதையடுத்து கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் அடுத்ததாக இயக்குநர் செல்வா அய்யாவு இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
மேலும், இந்தியன் 2 படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.செய்தி வாசிப்பாளர்.. சின்னத்திரை நடிகை... வெள்ளித்திரை நாயகி என ஒவ்வொரு படியாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது, இதனால் அணைத்து தரப்பு மக்களும் வீட்டில் நேரம் செலுத்தி வருகின்றனர். அதுபோல பிரபலங்களும் தான் அன்றாடம் செய்யும் வேலைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அது போல நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தான் வீட்டில் ஃபிரீயாக இருக்கும் நேரத்தில் செய்யும் வேலைகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். தற்போது, " ஒருவேளை இன்று நீங்கள் சிரிக்க வில்லையென்றால், நான் உங்களுக்கு ஒரு சிரிப்பை தருகிறேன். அவ்ளோதான் எல்லாம் முடிந்தது" என்று லந்தாக ஒரு தலைப்புடன் சிரித்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
"ஒருவேளை இன்னிக்கு நீங்க இதை பண்னலனா... நான் என்னோடத தரேன்.." - ப்ரியா பவானி ஷங்கர் லந்து..!
Reviewed by Tamizhakam
on
June 12, 2020
Rating:
