வேலூர் அருகே பயங்கரம் - மாணவியை பழி வாங்க சிறுவர்கள் செய்த வேலை - அதிர்ச்சி தகவல்..!


வேலூர் பாகாயம் பகுதியில் நடந்துள்ள ஒரு சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்று வீட்டின் சமையலறையில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு காரணம் அதே பகுதியை சேர்ந்த மூன்று சிறுவர்கள் தான் என்று தெரிய வந்துள்ளது. அந்த மாணவி வசிக்கும் பகுதி கிராமம் என்பதால் கதவு இல்லாத குளியறையில் குளிக்கும் போது அதனை வீடியோ எடுத்து அதனை வைத்து அந்த மாணவியை மிரட்டியுள்ளனர்.

பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் இந்த மூன்று சிறுவர்கள் தான் இந்த படு பாதக வேலையை செய்தது. இந்நிலையில், மாணவியின் தந்தை வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதை தொடர்ந்து மாணவியிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர் போலீசார்.

அந்த மாணவி கூறிய விஷயங்கள் தான் மேலும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன. அந்த மாணவி கூறியதாவது, " நான் குளிப்பதை வீடியோ எடுத்தவர்கள் என்னுடைய சித்தப்பாவின் தொலைபேசிக்கு போன் செய்தார்கள். அப்போது, நான் தான் போனை எடுத்தேன். உன்னுடைய குளியல் வீடியோ இந்த வாட்சப் நம்பருக்கு அனுப்பியிருக்கோம் , பாத்துட்டு லைனுக்கு வா.. இல்லனா இந்த வீடியோசோஷியல் மீடியால போட்டுருவோம் என்றனர்.

அதே மாதிரி நான் குளிக்கிற வீடியோவை எனக்கு அனுப்புனாங்க. அந்த வீடியோவை டெலிட் பண்ணிடுங்க என்று கேட்டேன். ஆனால், ஐந்தாயிரம் பணம் குடு என்றார்கள். உன்னையும், உன் சித்தப்பாவையும் பழி வாங்க தான் இப்படி பண்ணியிருக்கோம் என்றார்கள். விஷயத்தை என் சித்தியிடம் சொல்லி பணம் கேட்டேன். பணம் தர வேண்டாம். நாம போலீஸ் கிட்ட போகலாம் என்றார் என் சித்தி.

அதுக்குள்ள அவனுங்க மறுபடியும் போன் பண்ணி வேலூர் கோட்டைக்கு வா என்று அழைத்தார்கள். ஆனால்,நான் வர முடியாது என்று கூறி விட்டேன். சரி, ஏரிக்கரை மழைக்காவது வா என்றார்கள். நானும் போனேன். அங்கே போய் ஒருத்தனை பிடித்துக்கொண்டு சத்தம் போட்டேன். இரண்டு பேர் ஓடி விட்டார்கள். அவனோட போனை பிடிங்கி என்னுடைய வீடியோவை டெலிட் பண்ணினேன்.

என் வீடியோ மட்டுமில்லாமல், என் பாட்டி குளிக்கும் வீடியோ மேலும் எங்கள் ஊர் பெண்கள் பலர் குளிக்கும் வீடியோவை மறைந்து நின்று எடுத்து வைத்திருந்தனர். இதெல்லாம் நான் டெலிட் பண்ணிகிட்டே இருந்தேன். என் தலையில கல்லை தூக்கி அடிச்சுட்டு அவனும் ஓடிப்போயிட்டான்.

வீட்டுக்கு வந்து செத்துபோயிடலாம்ன்னு கொளுத்திகிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தை பதற வைத்துள்ளது. இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால், அந்த விஷம காரியத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுவன் அண்ணல்.அம்பேத்கர் உருவம் பதித்த ஆடையை அணிந்திருந்தான் என்பது தான்.
வேலூர் அருகே பயங்கரம் - மாணவியை பழி வாங்க சிறுவர்கள் செய்த வேலை - அதிர்ச்சி தகவல்..! வேலூர் அருகே பயங்கரம் - மாணவியை பழி வாங்க சிறுவர்கள் செய்த வேலை - அதிர்ச்சி தகவல்..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.