"பல முறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்.." - திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நடிகர் மீது சசிகுமார் பட நடிகை புகார்..!
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் அவர். சசிகுமார் நடித்த படம்
ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் மாம்பலம் அனைத்து
மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
சமீப காலமாக நடிகையாகும் கனவுடன் இருக்கும் பெண்களை சினிமா வாய்ப்பு தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவர்களை தனிப்பட்ட பசியை தீர்க்கும் பொருளாக பயன்படுத்திக்கொண்டு கழட்டி விட்டு செல்லும் ஆசாமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதனால் பாதிக்கப்படும் நூறு பெண்களில் ஒருவர் மட்டும் தான் இந்த விஷயத்தை வெளியே சொல்கிறார். மற்ற பெண்கள் மானத்திற்கு பயந்து அமைதியாக இருந்து விடுகிறார்கள். அப்படி துணிந்து புகார் கொடுக்கும் பெண்களுக்கு மோசமான பட்டம் காட்டுகின்றது சமூகம்.
இந்நிலையில், இளம் நடிகை ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூட தனிமையில் இருந்து விட்டு ஏமாற்றிய நடிகர் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகாரில் அவர் கூரியுள்ளதாவது, நான் சினிமாவில் நடித்து வருகிறேன். எனக்கு, 'தரிசு நிலம்' என்ற படத்தில்
நடித்துள்ள சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த தியாகராஜன்
என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. நட்பாக பழகினோம்.
பின்னர் இருவரும் கடந்த
சில வருடங்களாகக் காதலித்து வந்தோம். அவர் சென்னை மாநகராட்சியில் வேலை
செய்கிறார்.2011-ம் ஆண்டு முதல் எங்கள் காதல் தொடர்ந்து வந்தது. அவர் என்னை திருமணம்
செய்து கொள்வதாகக் கூறிவந்தார்.
நானும் அவரை நம்பி நெருங்கி பழகி
வந்தேன். மேலும், என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில்,
தியாகராஜன் என்னை சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். அவர் நடவடிக்கையில்
சந்தேகம் வந்தது.
என்னை திருமணம் செய்து கொள்ளும் படி கேட்டால் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். இதனால், அவர்மீது புகார் கொடுத்துள்ளேன்.இதையடுத்து பாலியல் வன்கொடுமை, நம்பிக்கை மோசடி மற்றும் கொலை மிரட்டல்
உள்பட 5 பிரிவுகளின் கீழ் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட தியாகராஜன் நீதிமன்ற
காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டை அவர்
மறுத்துள்ள அவர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.
"பல முறை என்னுடன் உல்லாசமாக இருந்தார்.." - திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நடிகர் மீது சசிகுமார் பட நடிகை புகார்..!
Reviewed by Tamizhakam
on
June 10, 2020
Rating:
