சுஷாந்த் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட சமந்தா..! - விளாசும் நெட்டிசன்கள்..!


பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் நேற்று மதியம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மும்பை வீட்டில் தூக்கில் தொங்கி இவர் தற்கொலை செய்து கொண்டார்.

இவர் பல்வேறு இந்தி படங்களில் நடித்தவர். கை போச்சே என்னும் இந்தி படத்தில் அறிமுகம் ஆனவர் வடஇந்தியாவில் மட்டுமின்றி தென்னிந்தியாவில் பிரபலம். இவரின் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்புதான் சுஷாந்த் சிங்கின் முன்னாள் பெண் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த்சிங்கிங் முன்னாள் பெண் மேனேஜர் கடந்த ஜூன் 8ம் தேதி இதேபோல் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் பெயர் திஷா சலியான். மும்பையில் 14 மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து அவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலை நிகழ்ந்த போது அதே அறையில் அந்த பெண் மேனேஜரின் காதலன் இருந்துள்ளார்.

இவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறது. இந்த தற்கொலைக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. இது தொடர்பாக நிறைய மர்மங்கள் நிலவி வருகிறது. இவரின் மறைவுக்கு சுஷாந்த் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து இருந்தார்.

அந்த சம்பவம் நடந்து சரியாக 7-வது நாள் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை சமந்தாவும் இவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட பதிவில் "ஏன்.. கடவுளே.. ஏன்... #RIPSushant" என்று கூறியிருந்தார்.


இதனை பார்த்த ரசிகர்கள் அவர் எடுத்த முடிவுக்கு கடவுள் என்ன செய்வார்...? இதற்கு கடவுளை கேள்வி கேட்பது முறையல்ல..? என்று கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

சுஷாந்த் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட சமந்தா..! - விளாசும் நெட்டிசன்கள்..! சுஷாந்த் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட சமந்தா..! - விளாசும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on June 15, 2020 Rating: 5
Powered by Blogger.