பாய்ந்து வந்த ரம்யாகிருஷ்ணன் கார் - டிக்கியை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! பாட்டில் பாட்டிலாக மதுபானம் - பரபரப்பு தகவல்..!
நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார். காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது.
இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும். பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள்.
ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. 35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 49 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.
சமீபத்தில்கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஈ-பாஸ் இல்லாமல் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களை அனுப்பது கிடைத்து. இரவு பகலாக இதே வேலையாக வாகன சோதனை பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக போலீசார்.
அப்படித்தான் ஈசிஆர் ரோட்டில் கானத்துார் போலீசார் முட்டுக்காடு அருகில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர்.. அப்போது மகாபலிபுரத்தில் இருந்து ஒரு இன்னோவா கார்.. TN 07 CQ 0099 என்ற பதிவெண் கொண்டது.. அந்த காரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போதுதான் அந்த கார் ரம்யா கிருஷ்ணனுடையது என்பது தெரியவந்தது. காருக்குள் டிரைவர் செல்வகுமாரும், ரம்யா கிருஷ்ணனும், அவரது சகோதரி வினயா கிருஷ்ணனும் உட்கார்ந்திருந்தனர். அவர்களிடம் போலீசார் காரின் டிக்கியை திறக்க வேண்டும் என்று போலீசார் சொன்னார்கள்.
அதன்படியே டிக்கியும் திறக்கப்பட்டது.. அதில், சோதனை நடத்தியதில், 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாய்ந்து வந்த ரம்யாகிருஷ்ணன் கார் - டிக்கியை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! பாட்டில் பாட்டிலாக மதுபானம் - பரபரப்பு தகவல்..!
Reviewed by Tamizhakam
on
June 13, 2020
Rating:
