கிண்டல் அடித்த ஷாருக்கான் - "போங்கடா கிறுக்கு ****ளா.." என்று பதிலடி கொடுத்த மாதவன்..! - தீயாய் பரவும் வீடியோ..!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 34 வயதே ஆன இளம் நடிகர் பாலிவுட்டில் குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கத்தால் வாய்ப்பு மறுக்கப்பட்டு மனவேதனைக்கு ஆளாகி சுஷாந்தின் மரணத்திற்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் மாதவனை, ஷாருக்கானும், சைப் அலி கானும் சேர்ந்து கொண்டு கேலி செய்யும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அந்த நிகழ்ச்சியில், மாதவனை தமிழில் பேச சொல்லி கேலி செய்கிறார்கள் ஷாருக்கானும், சைப் அலி கானும். அதற்கு மாதவன், "போங்கடா கிறுக்கு கதாநாயகங்களா", எனக் கூறி பதிலடி கொடுக்கிறார்.
மாதவன் கூறுவதை கேட்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ரேகா, வித்யா பாலன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் வாய்விட்டு சிரிக்கின்றனர். சுஷாந்த் சிங் மரணத்தையொட்டி இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சுஹாந்த் சிங்கின் மறைவால் பாலிவுட்டில் நடக்கும் நெபோடிசம் எனும் குடும்ப ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் மேலோங்கி வருகிறது.
கிண்டல் அடித்த ஷாருக்கான் - "போங்கடா கிறுக்கு ****ளா.." என்று பதிலடி கொடுத்த மாதவன்..! - தீயாய் பரவும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
June 20, 2020
Rating:
