சன் TV சீரியலில் நடிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் - எந்த சீரியல்..? எவ்வளவு சம்பளம்ன்னு பாருங்க மக்களே..!
நடிகை யாஷிகா ஆனந்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் செம கிளாமராக நடித்து இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் யாஷிகா ஆனந்த்.
அதற்கு முன்பே ஜீவா - காஜல் நடித்த கவலை வேண்டாம் என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் அவர். அதுதான் தமிழில் அவரது முதல் படம். அந்த படத்தில் நீச்சல் சொல்லித் தரும் டீச்சராக நடித்திருந்தார் யாஷிகா.
மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் அதிகம் புகழ் பெற்றார் யாஷிகா. இந்நிலையில் தற்போது கொரோனா லாக் டவுன் நேரத்தில் தனது வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார் யாஷிகா.
ஆனால், இந்த மூன்று மாதங்களை வீணாக்காமல் அவர் தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக உடற்பயிற்சி செய்து உள்ளார். அதன் மூலமாக அவர் அதிக அளவு உடல் எடையை குறைத்துள்ளார்.சன் டிவி சீரியல்களில் டாப்பில் உள்ள சீரியலான ரோஜா சீரியலில் அதிரடி காட்டியிருக்கிறார் அதன் இயக்குநர்.
அதாவது ரோஜா சீரியலில் திரைப்பட நடிகை மற்றம் பிக்பாஸ் புகழ் மற்றும் யாஷிகாக ஆனந்த்தை கமிட் செய்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில், பிரியங்கா நல்கரி, சிப்பு சூரியன், வடிவுக்கரசி, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சீரியலில் புதிய திருப்பமாக யாஷிகா ஆனந்த் இணைந்துள்ளார். யாஷிகா ஆனந்த் நடிக்கும் சில காட்சிகள் அண்மையில் ஷுட் செய்யப்பட்டுள்ளது. அதில் நாயகனான அர்ஜூனுடன் யாஷிகா ஆனந்த் டூ வீலரில் செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இந்த சீரியலில் நடிக்க யாஷிகாவிற்கு ஒரு எபிசோடுக்கு 1.5 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். இந்த தொடரில் சில எபிசோடுகள் மட்டும் நடிப்பாரா..? அல்லது சீரியல் முழுக்க நடிப்பாரா..? என்று எந்த தகவலும் வெளியாகவில்லை.
சன் TV சீரியலில் நடிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் - எந்த சீரியல்..? எவ்வளவு சம்பளம்ன்னு பாருங்க மக்களே..!
Reviewed by Tamizhakam
on
June 19, 2020
Rating:
