"வெய்யோன் சில்லி.." என்றால் இது தான் அர்த்தம்..! - சீரியல் நடிகை கொடுத்த விளக்கத்தை பாருங்க..!


சூரரை போற்று திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வெய்யோன் சில்லி என்ற பாடலில் இடம் பெறும் வெய்யோன் சில்லி என்றால் என்ன அர்த்தம் என்று கூறியுள்ளார் சீரியல் நடிகை சரண்யா.

தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாகவும் நியூஸ் ரிப்போர்டர் ஆகவும் தொகுப்பாளரகவும் பல பணிகளை தொடர்ந்து வந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தன்னுடைய க்யூட் நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.

சீரியல் நடிகை சரண்யா காலேஜ் படித்துக் கொண்டிருக்கும்போதே கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது, அதன்பிறகு ராஜ் டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல டிவி சேனல்களில் வளம் வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.

மேலும் சரண்யா ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார், சமீபத்தில் சரண்யா சமூகவலைதளத்தில் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் பற்றி பேட்டியில் கேட்கும்போது நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் தி ருமணம் செய்து கொள்வேன் எனக் கூறினார் அது தற்பொழுது உண்மையாக்கிவிட்டார்.

இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் இவர் எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார் சரண்யா,

சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக சரண்யா தன்னுடைய கணவருடன் ரொ மான்ஸில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு சூரரை போற்று படத்தில் இடம் பெற்றுள்ள "வெய்யோன் சில்லி" என்ற பாடலில் வெய்யோன் சில்லி என்றால் என்ன அர்த்தம் என்று கூறியுள்ளார்.


வெய்யோன் என்றால் சூரியன் என்றும், சில்லி என்றால் துண்டு(Piece). சூரியனின் ஒரு துண்டு.  A Piece of Sun என்று அர்த்தம் என கூறியுள்ளார்.

"வெய்யோன் சில்லி.." என்றால் இது தான் அர்த்தம்..! - சீரியல் நடிகை கொடுத்த விளக்கத்தை பாருங்க..! "வெய்யோன் சில்லி.." என்றால் இது தான் அர்த்தம்..! - சீரியல் நடிகை கொடுத்த விளக்கத்தை பாருங்க..! Reviewed by Tamizhakam on July 25, 2020 Rating: 5
Powered by Blogger.