"இப்டிலாம் போட்டோ போடாதிங்க.. சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது.." - நித்யாராம் ரொமான்ஸ் - கதறும் சிங்கிள்ஸ்..!


நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு திட்டங்கள் அந்த அந்த நாடுகளுக்கேற்ப தொடங்கிவருகின்றனர்.

இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது உயிரை பறிகொடுத்துள்ளனர். 66 லட்சம் பேர் குணமாகியுள்ளனர். 44 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் உலகமெங்கும் பல திரைப்பட பிரபலங்கள் தங்களது கருத்துகளை இணையதளத்தில் வெளியிட்டு விழிப்புணர்வை பரப்பி வருகின்றனர். அதன் வரிசையில் தற்போது நந்தினி சீரியல் நடிகை நித்யா ராம் தனது கணவனுடன் முகமூடி அணிந்து இதழோடு இதழ் முத்தம் தருவதுப்போல் ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்

இதற்குப்பெயர் கொரோனா கிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. ஒருவரையொருவர் தொடுவதனால் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் “ஒழுக்கமான” ரொமான்ஸில் ஈடுபடுங்கள் என்று அந்த புகைப்படத்திற்கு தலைப்பாக அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு முன் பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே இதேபோல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நேர்மாறாக, முகமூடி எதுவும் அணியாமல் கணவனுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. தன்னுடைய கேப்ஷனில் ஒருவருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதனை பார்த்த சிங்கிள் நெட்டிசன்கள், சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது என்று கதறி வருகிறார்கள்.

"இப்டிலாம் போட்டோ போடாதிங்க.. சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது.." - நித்யாராம் ரொமான்ஸ் - கதறும் சிங்கிள்ஸ்..! "இப்டிலாம் போட்டோ போடாதிங்க.. சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது.." - நித்யாராம் ரொமான்ஸ் - கதறும் சிங்கிள்ஸ்..! Reviewed by Tamizhakam on July 05, 2020 Rating: 5
Powered by Blogger.