"அவள் கண்களில் விண்மீனையும், மனதில் உலகத்தையும் கொண்டிருக்கிறாள்.." - படிகளில் படுத்தபடி நடிகை அஞ்சலி..!


இயக்குனர் ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பார்த்தாலே நம்ம பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் இவர் முகம், புருவங்களின் மத்தியில் பொட்டு, கன்னங்களில் வெளிர் சிவப்புப் பருக்கள், உதட்டில் சிறு புன்னகையோடு எதார்த்தமான கிராமத்து தமிழ் பேசி, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் அஞ்சலி.

தமிழில் நல்ல நடிகையாக பார்க்கப்பட்டாலும், இவருக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போனது, இதற்கு முக்கிய காரணம் இவர் சமீப காலமாக ஓவர் கவர்ச்சி காட்டியது தான் என்று கூறப்பட்டது. இதானால் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார்.

தமிழ் படங்கள் இவருக்கு இல்லாத சமயத்தில், நிறைய வதந்திகள் வந்ததாகவும். இப்படி பரப்பப்பட்ட வதந்திகளுக்கு பதில் சொல்லியே ஒரு நிலையில் ஓஞ்சுபோயிட்டதாக கூறியுள்ளார் அஞ்சலி.

இடையில், பிரபல நடிகருடன் காதல் , லிவ்-இன்-டுகெதர் வாழ்கை என கிசுகிசுக்கப்பட்டார். இதனால், சில நாட்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்தார். எடை கூடியது சினிமா வாய்ப்புகள் குறைந்தன. ஒரு பாடலுக்கு ஆட்டம் போட மட்டுமே அழைப்பு வந்து கொண்டு இருந்தது.தயங்காமல் அதையும் செய்தார்.


சில திரைப்படங்களில் கவர்ச்சியாக ஆட்டம் போட தயாரானார். எடை அதிகரித்த காரணத்தால் பல திரைப்படங்களின் வாய்ப்பை இழந்தார். மீண்டும் தவற விட்ட தனது இடத்தை பிடிக்க அஞ்சலி அதிரடியாக தனது உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.


அவ்வப்போது தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது படியில் படுத்தபடி "அவள் கண்களில் விண்மீனையும், மனதில் உலகத்தையும் கொண்டிருக்கிறாள்.." என்ற கேப்ஷனுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


"அவள் கண்களில் விண்மீனையும், மனதில் உலகத்தையும் கொண்டிருக்கிறாள்.." - படிகளில் படுத்தபடி நடிகை அஞ்சலி..! "அவள் கண்களில் விண்மீனையும், மனதில் உலகத்தையும் கொண்டிருக்கிறாள்.." - படிகளில் படுத்தபடி நடிகை அஞ்சலி..! Reviewed by Tamizhakam on July 25, 2020 Rating: 5
Powered by Blogger.