"இவள் ஒரு தெ*** - எல்லோரையும் ஏமாற்றுகிறாள்.." - ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து மீரா மிதுன் - தீய தீய வருத்தெடுக்கும் ரசிகர்கள்..!


மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 2016ஆம் ஆண்டுக்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார் மீரா மிதுன்.

ஆனால் தவறான தகவல்களை வழங்கி போட்டியில் கலந்து கொண்டதால் அவருக்கு வழங்கிய பட்டத்தை திரும்ப பெற்றது பெமினாஸ் அமைப்பு. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதிலும் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் மீது அபாண்ட குற்றச்சாட்டை கூறினார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன், அட்டைப்படங்களுக்காக நடத்திய கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

அதோடு தன்னுடைய கவர்ச்சியான செல்பி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவரது போட்டோக்களில் கவர்ச்சி எல்லை மீறி செல்வதால் கடுப்பான நெட்டிசன்கள் அவரது கண்டபடி வசை பாடி வருகிறார்கள்.

ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத மீரா மிதுன் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் பப்புகளில் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் கெட்ட ஆட்டம் போடும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் பழைய போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வந்தார் மீரா மிதுன்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் முன்னணி நடிகைகளை வம்புக்கு இழுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார் அம்மணி. அந்த வகையில், சமீபத்தில் திரிஷா தன்னுடைய ஸ்டைலை காப்பி அடிக்கிறார் என்று கூறி சர்ச்சையை கிளப்பினர்.


தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து என்னை பார்த்து காப்பி அடித்துள்ளார் என கூறிய அவர் ஒரு படி மேலே சென்று, "இவள் ஒரு தெலுங்கர், ஆனால் தமிழ் என்று எல்லோரையும் ஏமாற்றி வருகிறாள். படங்களில் குடும்பப்பாங்கான பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து சிம்ப்பதி உருவாக்கி ரசிகர்களை ஏமாற்றி வருகிறாள்" என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மீரா மிதுனை தீய தீய வருத்து வருகிறார்கள்.

"இவள் ஒரு தெ*** - எல்லோரையும் ஏமாற்றுகிறாள்.." - ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து மீரா மிதுன் - தீய தீய வருத்தெடுக்கும் ரசிகர்கள்..! "இவள் ஒரு தெ*** - எல்லோரையும் ஏமாற்றுகிறாள்.." - ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து மீரா மிதுன் - தீய தீய வருத்தெடுக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 25, 2020 Rating: 5
Powered by Blogger.