அட..! ஷாஜகான் திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ஹீரோவா..? - பார்ரா...!


நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஷாஜகான்". இயக்குனர் ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. ஷாஜகான் திரைப்படம் தான் நடிகர் விஜயின் கடைசி காதல் படம் என்று சொல்லலாம். அதுவரை குடும்பம் மற்றும் காதல் சம்பந்தபட்ட கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் விஜய்.

அதன் பிறகு, தமிழன், பகவதி என ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார் விஜய். ஷாஜகான் படத்தில் அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் விஜய். ஆனால், இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி அப்போது இருந்த சினிமா ரசிகர்களை பெரிதும் திருப்திபடுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

ஆனாலும், பொதுவான சினிமா ரசிகர்களை கவர்ந்தது இந்த படம். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்கு இதுவே முதல் படமாகும். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. இதுவே, அவருக்கு கடைசி படமாகவும் அமைந்து விட்டது.

அதன் பிறகு நீண்ட நாள் கழித்து செயல் என்ற படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் என்ன ஆனது..? ரிலீஸ் ஆகுமா..? ஆகாதா என்ற எந்த விபரமும் தெரியவில்லை.

ஷாஜகான் படத்தில் நடிகர் விஜய் அஷோக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் அஷோக் என்பவர் எப்படி காதலிப்பவர்களுக்கு உதவுகிறார் என்பதை பற்றியது. அவர் பெண்களை மணரீதியாக புரிந்து கொண்டு அவர்களது மனதில் இடம் பிடிக்கிறார்.

ஒருவர் ஒரு பெண்ணை காதல் வலையில் விழவைக்க வேண்டும் என்றால் அஷோக் அவர்களுக்காக உதவி செய்வார். மேலும் அஷோக் அவனது நன்பர்கள் அனைவருக்கும் ஒரு அறிவுரை கூறுவான். அதாவது காதல் வந்தவுடன் அதை போய் உடனடியாக சொல்லக்ககூடாது ஏன்னென்றால் அது ஒரு மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்று கடந்தகால சம்பவங்களை சொல்லுவான்.

உமா மகேஸ்வரி என்ற பெண்ணை அஷோக் காதலிப்பான் ஆனால் தன் காதலை அவளிடம் சொல்லமாட்டான். அஷோக்கின் நண்பன் ராஜா அதே பெண்ணை காதலிப்பன் ஆனால் அது அஷோக்கு தெரியாது. அஷோக் அவனது நண்பனான ராஜாவின் காதலை சேர்த்துவைப்பதாக நினைத்து கொண்டு ராஜாவுக்கு உதவிசெய்வான்.

அஷோக்கு ராஜா கத்திலிப்பது உமா மகேஸ்வரியை தான் என்பது தெரியாது. ராஜா மற்றும் உமா மகேஸ்வரி இருவரும் பதிவு திருமணம் செய்யும் போதுதான் அஷோக்கு ராஜா காதலிப்பது உமா மகேஸ்வரியைதான் என்பது தெரிய வரும்.

மனமுடைந்து அவனது நணபர்களுக்கு தெரியாமல் கண்ணீர் விட்டு அழுவான் அஷோக். மஹீயை திருமணம் செய்யாமல் மற்ற காதலர்களுக்கு உதவிக்கொண்டே இருப்பான் அசோக். இப்படியே படம் முடிவடைகிறது.காதலியை கரம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களை இந்த படம் ஏமாற்றியது. இதுவே இந்த படத்திற்குமிகபெரிய மைனஸ் பாய்ண்டாக கூறப்பட்டது.


இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யாரென்று ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நடிகர் ஷாம் தான் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க விருந்தார் என்றும் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போகவே நடிகர் விஜயிடம் கதை சொல்லி ஒகே வாங்கியுள்ளார் இயக்குனர் ரவி.

அட..! ஷாஜகான் திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ஹீரோவா..? - பார்ரா...! அட..! ஷாஜகான் திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ஹீரோவா..? - பார்ரா...! Reviewed by Tamizhakam on July 27, 2020 Rating: 5
Powered by Blogger.