"சீட்டு கட்டு, சீட்டு கட்டு நம்ம வாழ்க டா.." - நடிகர் ஷ்யாம் கைது..! - அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம்..!


சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் ஷ்யாமை தமிழக போலீசார் கைது செய்தனர். 12 பி, லேசா லேசா தில்லாலங்கடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஷ்யாம்.

தற்போது இவர் நடிகர் மட்டுமல்லாமல் பட தயாரிப்பாளரும் கூட. இவர் தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் இவர் தன்னுடைய வீட்டிலேயே சூதாட்டம் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

அத்துடன் பொலிசிலும் முறைப்பாடும் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற போலிசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகர் ஷாம் உள்ளிட்ட 14 பேரை கைது செய்தனர். பொது முடக்கத்தின் காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் நடிகர் ஷாம் அவரது நண்பர்கள், தொழிலதிபர்கள், தனியார் நிறுவன உயரதிகாரிகள், உணவக உரிமையாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட 14 பேரை போலிஸார் கைது செய்தனர்.

இந்த குடியிருப்பில் சூதாட்டம் தவறாமல் நடந்து வருவதாகவும், பல திரைப்பட நட்சத்திரங்கள் சூதாட்டத்தில் பங்கேற்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வந்த புகாரின் அடிப்படையில், சூதாட்டக்காரர்களைக் கைது செய்ய காவல்துறையினரால் ஒரு சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஷ்யாமைப் போலவே, மீதமுள்ள 12 நபர்களும் வெவ்வேறு துறைகளில் முக்கியமானவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் விசாரணைக்காக நுகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதன் பின்னர், அவர்கள் 13 பேருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஜாமீன் பெற்று விடுவிக்கப்பட்டார். இந்த செய்தி தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

"சீட்டு கட்டு, சீட்டு கட்டு நம்ம வாழ்க டா.." - நடிகர் ஷ்யாம் கைது..! - அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம்..! "சீட்டு கட்டு, சீட்டு கட்டு நம்ம வாழ்க டா.." - நடிகர் ஷ்யாம் கைது..! - அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம்..! Reviewed by Tamizhakam on July 28, 2020 Rating: 5
Powered by Blogger.