பிக்பாஸ் சீசன் 4 - இந்த இரண்டு பேர் போட்டியாளர்கள் உறுதி..! - எப்போது தொடங்குகின்றது தெரியுமா..?
தமிழில் மக்களிடையே, குறிப்பாக இள வட்டங்கள் இடையே அதிக ஆதரவைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது சர்ச்சையை கிளப்பி மக்களைப் பேச வைத்து விடுகிறார்கள்.
பிக்பாஸ் முதல் சீசன் ஆரம்பித்த போது எங்கு திரும்பினாலும் பிக்பாஸ் பேச்சாகவே தான் இருந்தது. அதே நேரம், கடந்த மூன்று சீசன்களும் ஜூன் மாதத்தில் தான் ஒளிபரப்பைத் தொடங்கின. ஆனால் இந்தாண்டு கொரோனா பிரச்சினையால் நிகழ்ச்சி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில், தமிழிலும் வரும் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 4 ஆரம்பமாகும் எனக் தகவல் வெளியாகி உள்ளது.
போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறதாம். இந்த முறை சர்ச்சை நாயகிகளாக டிக்டாக் புகழ் இலக்கியா மற்றும் ரம்யா பாண்டியன் நிகழ்ச்சியில் இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் 15 முதல் 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் வழக்கமாக எடுக்கப்படும் உடல் பரிசோதனைகளுடன், கொரோனா தொற்று உள்ளதா எனவும் சோதனை செய்யப்படும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும்,நிகழ்ச்சி தொடங்கிய பின்பும் நூறு நாட்களும் தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் எனவும் கூறுகிறார்கள்.
பிக்பாஸ் சீசன் 4 - இந்த இரண்டு பேர் போட்டியாளர்கள் உறுதி..! - எப்போது தொடங்குகின்றது தெரியுமா..?
Reviewed by Tamizhakam
on
August 13, 2020
Rating:
