"அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.." - கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..!
சர்ச்சை நடிகை சோனா கவர்ச்சிக்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல்தான் தான் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் எஸ் பி சரண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார்.
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2008 ஆம் ஆண்டு வெளியான பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா.
அதன் பின்னர் பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடித்து வந்தார். மேலும், நடிகை சோனா இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தில் நடித்திருந்தார்.சமீபகாலமாக அவருக்கு புதிய படங்கள் இல்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அவதார வேட்டை படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்து சோனா அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, எனக்கு கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து சலிப்படைந்து இருப்பார்கள்.
இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என்றும் முடிவு செய்தேன். நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பிறகு புதிய படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை.
தற்போதும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா.? என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
மேலும், பல நடிகைகள் சொல்லவே கூச்சப்படும் ஒரு விஷயம் குடிப்பழக்கம். ஆனால், சோனா எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆனால், நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்று வெளிப்படையாக குறிப்பிட்டு இருந்தார்.
கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா 'பச்சமாங்கா' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார்.
அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது. ‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதிரடி சண்டை, கவர்ச்சி, நெருக்கமான படுக்கை அறை காட்சிகளுடன் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சோனா, ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.
"அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.." - கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..!
Reviewed by Tamizhakam
on
August 11, 2020
Rating:
