வடிவேலுவை திருமணம் செய்து கொள்ள தயாரான இளம் நடிகை இனியா - வைரலாகும் புகைப்படங்கள்..!


நடிகை இனியா ஆரம்பக் காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் வாகை சூடவா படம் இவருக்கு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து மௌன குரு, புலிவால், மாசாணி படங்களில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது. 

மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை இனியா மம்மூட்டியுடன் இணைந்து மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார். 

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் நடிகை இனியா தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாகவே குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.



அந்த வகையில், தற்போது கையில் சொம்பு ஒன்றை வைத்துக்கொண்டு பாரம்பரிய உடையில் அம்சமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கையில் சொம்புடன் எங்கே கிளம்பிடீங்க, வடிவேலுவை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா..? சொம்பு ரெடி.. மாப்பிள்ளை வடிவேலு ரெடியா..? என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.


பார்த்திபன், வடிவேலு இணைந்து நடித்த காதல் கிறுக்கன் என்ற படத்தில் சொம்பு கொடுத்தா தான் கல்யாணம் என்ற காமெடி காட்சியை நினைவில் வைத்து தான் இப்படி கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.

வடிவேலுவை திருமணம் செய்து கொள்ள தயாரான இளம் நடிகை இனியா - வைரலாகும் புகைப்படங்கள்..! வடிவேலுவை திருமணம் செய்து கொள்ள தயாரான இளம் நடிகை இனியா - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 09, 2020 Rating: 5
Powered by Blogger.