ஒரு "சீ" கேட்டு நடுவிரலை காட்டிய நடிகை - ச்சீ என நடையை கட்டிய தயாரிப்பாளர்..!
அழகி நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை அதிர வைத்துள்ளாராம். அழகி நடிகையை ஹீரோவை காதலிக்கும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வைக்கிறார்கள்.
அவர் நடித்துள்ள சில படங்களை பார்த்தால் இப்படி ஒரு முட்டாள்தனமான கதாபாத்திரத்தில் நடிக்க எப்படித் தான் ஒப்புக் கொண்டாரோ என்றெல்லாம் ரசிகர்கள் விமர்சித்தது உண்டு.அவருக்கு தற்போது அதிக சம்பளம் வாங்க வேண்டும், வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.
அதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தையும், கதாபாத்திரத்தையும் கொடுக்க யாரும் தயாராக இல்லை. வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வேறு சில நடிகைகள் உள்ளார்கள். இந்த அம்மணியை அது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க முடியாது என்கிறார்கள் இயக்குநர்கள்.
நடிகையை நம்பி வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்த ஒரு இயக்குநர் பட்ட கஷ்டத்தை பார்த்து மற்றவர்கள் பாடம் கற்றுக் கொண்டுள்ளனர். அம்மணி வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்த படம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
இந்நிலையில், முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்குமாறு இயக்குநர், தயாரிப்பாளர் அவரை சந்தித்து பேசியுள்ளனர். அதற்கு அம்மணியோ ஒரு சீ சம்பளம் வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நான் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் நடிப்பேன், இல்லை என்றால் வேறு ஆளை பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹீரோவை காதலித்து, டூயட் பாட இவருக்கு ஒரு சி கொடுப்பதற்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட அந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் வேறு யாரையாவது நாங்கள் நடிக்க வைத்துக்கொள்கிறோம் என நடிகையிடம் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு கடுப்பான நடிகை இயக்குனர் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்பதால் நடுவிரலை காட்டி கிண்டலடித்துள்ளார். இதனை பார்த்த தயாரிப்பளர் என்னதான் பிரண்ட்ஷிப் என்றாலும் ஒரு லிமிட் இருக்கு ச்சீ. என்று திரும்பி வந்துள்ளார்.
அம்மணிக்கு பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் பாலிவுட்டில் அவரை யாரும் மதிப்பதே இல்லை. அவர் நடிக்கும் இந்தி படங்கள் ஒன்று ஓடுவது இல்லை, அப்படியே ஓடினாலும் பாவம் யாரும் நடிகையை கண்டுகொள்வது இல்லை.
ஒரு "சீ" கேட்டு நடுவிரலை காட்டிய நடிகை - ச்சீ என நடையை கட்டிய தயாரிப்பாளர்..!
Reviewed by Tamizhakam
on
August 20, 2020
Rating:
