அவர்கள் என் காதலர்கள் அல்ல - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா ஆனந்த்..!
தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு
மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி முன்னணி நடிகையாக வலம்
வருபவர் தான் நடிகை பிரியா ஆனந்த்.
இவ்வாறு பிரபலமாக வலம் வந்த நமது நடிகை தற்போது படவாய்ப்புகள் இல்லாமல்
தடுமாறி வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக ஆர்ஜே பாலாஜி நடிப்பில்
வெளிவந்த எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைக் கண்டார்.
இந்நிலையில், சமீப காலமாக பிரியா ஆனந்துக்கும், அதர்வாவுக்கும் காதல் எனவும் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள் என்றும் தகவல் பரவியது. இது போதாதென்று, பிரியா ஆனந்துக்கும், கவுதம் கார்த்திக்கும் காதல் என்றும் இருவரும் திருமணம் வரை நெருங்கி விட்டார்கள் என்றும், அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
அந்த இரண்டு கதாநாயகர்களில் பிரியா ஆனந்த் மனம் கவர்ந்தவர் யார்? என்று அவரிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு “அதர்வா, கவுதம் கார்த்திக் இருவருமே என்னோட நல்ல நண்பர்கள். அவர்கள் என் காதலர்கள் அல்ல.
இதை நாங்கள் மூன்று பேருமே தனித்தனியாக உறுதி செய்து இருக்கிறோம். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நண்பர்கள் என்ற முறையில் இருவருமே விரும்புகிறார்கள். அதேபோல் என் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நல்ல சினேகிதியாக நான் விரும்புகிறேன்’’ என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அவர்கள் என் காதலர்கள் அல்ல - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா ஆனந்த்..!
Reviewed by Tamizhakam
on
August 10, 2020
Rating:
