"முண்டா பணியன்.. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்" - வாணி போஜனா இது..? - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை வாணி போஜன். 'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து அவர் நடித்த 'லாக்கப்' படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. 

மேலும் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் ஆபாசமில்லாத கவர்ச்சியான படங்களையும் பதிவிட தொடங்கி உள்ளார். மேலும் லாக்கப் படத்தில் ஹீரோ உடன் நெருக்கமாக நடித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்களை கொடுத்தனர். 

அவர்களுக்கு பதில் தரும் விதமாக, ''நான் அணியும் உடையில் கவனமாக இருக்கிறேன். அதுபோல ஒருவர் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை. படங்களில் கதைக்கு ஏற்ப கவர்ச்சி தேவைப்பட்டால், அது எல்லை மீறாமல் இருந்தால் தவறில்லை'' என்கிறார். 

இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தெய்வமகள் என்ற சீரியலில் சத்யாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார் வாணி போஜன் மேலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் சிறப்பாக நடித்து கொண்டிருந்த இவரை புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்கள் வாணி போஜன் ஓ மை கடவுளே நடிக்க வைத்தார். இப்படத்தில் அவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கினார். 


இதைத்தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார் இதனையடுத்து தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக்கொள்ள சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.


அந்த வகையில் தற்போது, முண்டா பணியன் கிழிந்த ஜீன்ஸ் சகிதமாக கேஷுவலாக ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி.

"முண்டா பணியன்.. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்" - வாணி போஜனா இது..? - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..! "முண்டா பணியன்.. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்" - வாணி போஜனா இது..? - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on August 19, 2020 Rating: 5
Powered by Blogger.