REVEALED : நயன்தாராவின் சிம்பிள் டயட் ப்ளான் - அட இவ்ளோ ஈசியா இருக்கே..!


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஐயாவில் அறிமுகமானபோது மெல்லின இடுப்பழகி எல்லாம் இல்லை. வல்லினம்தான். போதாதற்கு அடிவயிற்றில் குட்டித் தொப்பை வேறு. 

இப்படி கொளுக்கு மொழுக்கென தன்னுடைய அழகால் 90ஸ் கிட்ஸ்களை கட்டிப்போட்டார். இதனால் இவருக்கு பட வாய்புகள் சக்கரையை கண்ட எறும்பு போல படையெடுத்தது.ரஜினியுடன் நடித்த சந்திரமுகி படத்திலும் அவர் அதே தோற்றத்தில்தான் இருந்தார் என்றாலும் நயன் ரசிகர்கள் பன்மடங்காகப் பெருகினர். 

நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த கஜினி திரைப்படத்தை திரையில் பார்த்த பின்னர்தான் நயன்தாராவுக்கு தனது உடல் வடிவம் குறித்த ஒரு அக்கறையும் ஆர்வமும் வந்ததாக அவரது முன்னாள் உதவியாளர் கூறுகிறார்.

இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி. அதில் எஸ்.ஜே.சூர்யாவே நயனை குண்டாக இருப்பதாக ஒரு காட்சியில் கலாய்த்து இருப்பார். அடுத்து வந்த வாய்ப்புதான் சிம்புவுடன் நயன் நடித்து வெளியான வல்லவன் படம். 

சிம்பு உடம்பை குறை என்று ஆலோசனை சொன்னதை கப்பென்று பிடித்துக்கொண்ட நயன், எப்படி உடம்பை குறைப்பது (Weight Loss) என்று தெரியாமல் பட்டினி கிடந்து பார்த்தாராம்.இதனால், அவரது உடல் குறைந்ததே தவிர, உடல் சதைகள் அவ்வளவு டைட்னிங் ஆகலையாம். 

விழித்துக் கொண்ட நயன், இருக்கவே இருக்கிறது கேரளாவின் இயற்கை முறை அழகு சிகிச்சை என்று கேரளாவுக்கு சென்று முகாமிட்டார். அங்கு போன நேரமோ அல்லது மாயமோ.. சிக்கென மாறி பில்லாவில் பிரமிக்க வைத்தார். 

தல அஜித்துடன் பில்லா படத்தில் ஹாலிவுட் கதாநாயகிகளுக்கு நிகரான ஒரு ஸ்டைலிஷ்! உடை, நடை, பாவனை இந்திய பெண்களுக்கு உண்டான நளினம் என்று ஐயா நயன்தாராவா இது என்று எல்லோரையும் வாய் பிளக்க வைத்தார் பில்லா நயன்தாரா.

ஆரோக்கியமான உணவுகள் (Health Foods)


இப்படி தன்னை தானே செதுக்கி கொண்டு லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் தற்போதைய டயட் ப்ளான் என்ன என்று அவரே கூறியுள்ளார். அதன், பழங்கள், முட்டை, காய் கறிகள் , குறைவான அளவில் மாமிசம் ஆகியவற்றை விரும்பி உண்ணும் இவர் வெள்ளை சர்க்கரை மற்றும் Process செய்யபட்ட இனிப்புகளை தவிர்த்து விடுவாராம். 

மேலே உள்ள உணவுகள் படி காலையில் வயிறு முட்ட சாப்பிடுவாராம் நயன்தாரா. மதியம், காலையில் சாப்பிட்டதில் பாதியும். இரவு, மதியம் சாப்பிட்டதில் பாதியும் தான் சாப்பிடுவாராம். குறிப்பாக, இரவு நேர உணவை மாலை 7 மணி முதல் 8 மணிக்குள் முடித்து விடுவாராம் நயன்.

REVEALED : நயன்தாராவின் சிம்பிள் டயட் ப்ளான் - அட இவ்ளோ ஈசியா இருக்கே..! REVEALED : நயன்தாராவின் சிம்பிள் டயட் ப்ளான் - அட இவ்ளோ ஈசியா இருக்கே..! Reviewed by Tamizhakam on August 11, 2020 Rating: 5
Powered by Blogger.