தன்னை விட 30 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் - கேத்ரீன் தெரேசா சம்பளம் - வயிறு எரியும் சக நடிகைகள்..!

 
நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர், இவர் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் காரணம் கவர்ச்சி கண்டிஷன் போடுவதில்லை, தாராளம் காட்டி நடித்து வருகிறார். 
 
தமிழிலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டும் கேத்ரின் தெரசா, தெலுங்கில் எப்படி என்று சொல்லவா வேண்டும். டோலிவுட்டில் கவர்ச்சியில் அசால்ட் செய்து வருகிறார். இதனால் தெலுங்கில் கேத்ரீன் தெரசாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 
 
என்ன தான் கொடிகட்டி பறந்தாலும் எல்லா நடிகைகளையும் போல, கேத்ரின் தெரசாவும் இப்போது பட வாய்ப்பு ஏதுமின்றி இருக்கிறார். எல்லாத்துக்கும் ஓகே சொன்னாலும், எதுவும் அமைய மாட்டேங்குது என கவலையில் இருந்த கேத்ரீன் தெரசாவிற்கு அடித்தது லக்கி பிரைஸ். 
 
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான பாலகிருஷ்ணாவுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வீடு தேடி வந்தது. ஓகே! வந்த வாய்ப்பை ஏன் வேண்டாம் என சொல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டார் கேத்ரின்.


சும்மா ஒன்னும் இல்லங்க, அம்மணி அந்த படத்திற்கு வாங்கியிருக்கும் சம்பளம் ரவுண்டா ஒரு கோடி ரூபாயாம். அதனால் தன்னை விட 30 வயது அதிகமான நடிகர் என்றாலும் பரவவில்லை, டூயட் பாட நான் தயார் என பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். 
 
இது சக நடிகைகளின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது.

தன்னை விட 30 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் - கேத்ரீன் தெரேசா சம்பளம் - வயிறு எரியும் சக நடிகைகள்..! தன்னை விட 30 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் - கேத்ரீன் தெரேசா சம்பளம் - வயிறு எரியும் சக நடிகைகள்..! Reviewed by Tamizhakam on September 04, 2020 Rating: 5
Powered by Blogger.