"சலிப்பாக இருந்தால் நிழல் வெளியே வரும்.." - த்ரீன் தெரேசா..!


இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய, 'மெட்ராஸ்' படத்தில் துளி கூட கவர்ச்சி காட்டாமல் நடித்த கேத்தரின் தெரசா, தற்போது கவர்ச்சி காட்டாமல் ஒரு படங்களில் கூட நடிப்பதில்லை. 
 
இதனால் தான் என்னவோ அவர் அடுக்கடுக்காக பல தமிழ் படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே நேரத்தில் தான் நடிக்கும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் 'அருவம்' படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். 
 
ஒரு காலத்தில் அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் இப்போது படங்கள் இல்லாம கவர்ச்சி உடை அணிந்து ஃபோட்டோ ஷுட் செய்து புகைப்படங்களை அப்லோடு செய்து கொண்டிருக்கிறார். 
 
கேத்ரின் மெட்ராஸ் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற படம் தோல்வியை தழுவியது. 
 
இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து " சலிப்பு ஏற்படும் போதெல்லாம் நிழல் வெளியே வரும்..." என்று கேப்ஷனையும் வைத்துள்ளார்.

"சலிப்பாக இருந்தால் நிழல் வெளியே வரும்.." - த்ரீன் தெரேசா..! "சலிப்பாக இருந்தால் நிழல் வெளியே வரும்.." - த்ரீன் தெரேசா..! Reviewed by Tamizhakam on October 14, 2020 Rating: 5
Powered by Blogger.