தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..!

 
சித்தார்த், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அவள்'. சித்தார்த் தயாரித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து 'அவள் 2' படத்தின் பணிகளைக் கவனித்து வந்தார். 
 
அந்தப் படத்தின் பணிகள் தள்ளிப் போனதால், தனது புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.இதில் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்தார். இதன் கதையைக் கேட்டுவிட்டு, இயக்குநர் விக்னேஷ் சிவனே தயாரிக்க முன்வந்தார். 
 
இதன் முதற்கட்டப் பணிகளான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது.இதற்கு 'நெற்றிக்கண்' எனப் பெயரிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 
 
ரஜினி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'நெற்றிக்கண்'. அந்தப் படத்தைத் தயாரித்த கவிதாலயா நிறுவனத்தினரிடமிருந்து அதிகாரப்பூர்வமாகத் தலைப்புக்கு உரிமைப் பெற்று வைத்துள்ளனர்.
 
 
இந்தப் படத்தில் நயன்தாரா கதாபாத்திரம் அவரது முந்தைய படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும் என்று இயக்குநர் மிலந்த் ராவ் தெரிவித்துள்ளார். 'ஐரா', 'மிஸ்டர் லோக்கல்', 'கொலையுதிர் காலம்' ஆகிய படங்களின் தோல்வியால், எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமலிருந்தார் நயன்தாரா. 
 
அதற்குப் பிறகு மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இளம் நடிகர் சரண் சக்தி ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
 
இந்த தகவலை நம்முடைய தளத்தில் தி சினிஃபிளிக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம். தற்போது, வரை ஆல் டைம் ஹிட்  பதிவாக அந்த பதிவு உள்ளது.
 
நடிகை நயன்தாராவிற்கு தற்போது 36 வயது. ஆனால், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ள சரண் சக்திக்கு 22 வயது தான் ஆகின்றது. ஒருவேளை பிளாஷ்பேக்கில் வரும் சின்ன நயன்தாரா காட்சிகளுக்காக இப்படி இளம் நடிகரை தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறுகிறார்கள்.
 
இப்படி, தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு நயன்தாரா ஜோடியாவது இதுவே முதன் முறை ஆகும். இது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..! தன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஹீரோ யாருன்னு தெரிஞ்சா தூக்குவாரிப்போடும்..! Reviewed by Tamizhakam on November 28, 2020 Rating: 5
Powered by Blogger.