"வாவ்..!." - பொசு பொசுவென இருந்த நடிகை ராசி மந்த்ராவா இது - வாயடைத்து போன ரசிகர்கள்..!
விஜய்யுடன் 'லவ் டுடே', அஜித்துடன் 'ராஜா' மற்றும் பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம், ஆளுக்கொரு ஆசை உள்ளிட் பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் மந்திரா.
இவர் கலர்ஸ் நிறுவன உரிமையாளரின் உறவினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மந்த்ரா. இவர், விஜயா மற்றும் ராசி என்றும் அழைக்கப்படுகிறார்.
தேவையானி உடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு வந்த எல்லாமே என் தங்கச்சி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, தளபதி விஜய்யின் லவ் டுடே படத்தில் நடித்தார்.
இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, ரெட்டை ஜடை வயசு, கொண்டாட்டம், கல்யாண கலாட்டா, புது குடித்தனம், கண்ணன் வருவான், குபேரன், சிம்மாசனம், ராஜா, ஆளுக்கொரு ஆசை, சுயேட்சை எம்.எல்.ஏ., ஒன்பதுல குரு, வாலு, கவலை வேண்டாம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 90களில் நடித்த நடிகைகள் பலர் தற்போது காணாமல் போய்விடுகிறார்கள். அதில் ஒருசிலர் மட்டும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
அந்தவகையில் 90களில் தன் கவர்ச்சியான நடிப்பால் கொடிகட்டி பறந்த நடிகை ராசி மந்த்ரா. தற்போது தன் பெண் குழந்தையுடன் கணவரோடு வாழ்ந்து வருகிறார். மீண்டும் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் தற்போது யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில், அழகு குறிப்புகள் முதல் எடை குறைப்பு குறிப்புகள், சமையல் குறிப்புகள் மற்றும் படப்பிடிப்பு தள வீடியோக்கள் என பதிவு செய்து வருகிறார்.
குண்டாக இருந்த இவர் தற்போது உடல் எடை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கு இணையாக சிக்கென மாறியுள்ளார். இதோ அவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றன.
"வாவ்..!." - பொசு பொசுவென இருந்த நடிகை ராசி மந்த்ராவா இது - வாயடைத்து போன ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
December 07, 2020
Rating:
