VJ சித்ரா பேசிய கடைசி தொலைபேசி அழைப்பு இது தான்..! - திக் திக் தகவல்கள்..!

 
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரில், முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர் சித்ரா. அவர் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்காக சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். 
 
அந்த ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த. சித்ராவுக்கும், தொழில் அதிபர் ஹேம்நாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 
 

தூக்கில் பிணமாக சித்ரா

 
இந்நிலையில், அவருடன் சித்ரா ஹோட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 2.30 மணி அளவில், படப்பிடிப்பு முடிந்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பிய சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனைத் தொடர்ந்து சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் சித்ராவின் உடலை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. 
 
விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை உலகினரையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் சித்ராவின் உடற்கூராய்வு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்றது. 
 
சித்ராவினது கன்னத்தின் தாடைப்பகுதியில் இருந்த காயங்கள் எதனால் ஏற்பட்டது. அவரது நகக்கீரலா, அல்லது வேறு ஒருவரால் ஏற்படுத்தப்பட்டதா என்பது பிரேதப்பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தெரியவரும். 
 

பிரேதப்பரிசாதனை

 
ஒருவர் தூக்கில் தொங்கி உயிர்நீத்தால் அவரது கழுத்து எழும்பு உடைந்திருக்கும் என்றும் அதை வைத்து தூக்கிட்டதால், உயிரிழந்தாரா அல்லது உயிரிழந்த பின்னர் தூக்கிலிடப்பட்டாரா என்பதை சொல்லமுடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 
 
இதே போல் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழக்கும் போது, சுவாசிக்க முயற்சித்து நாக்கு வெளியில் வரும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சித்ரா விவகாரத்தில் அப்படியான விஷயங்கள் இல்லை என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். 
 
எனவே பிரேதப்பரிசாதனை முடிவுகள் வெளியான பிறகு தான் சித்ரா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என தெரிகின்றது.

இந்நிலையில், சித்ராவிற்கு வந்த கடைசி தொலைபேசி அழைப்பு பற்றி அவருடன் இருந்த நடிகை சரண்யா துராடி சுந்தராஜ் கூறியுள்ளார். படப்பிடிப்பில் இருந்த போது அவருக்கு கடைசியாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
 

VJ சித்ரா பேசிய கடைசி தொலைபேசி அழைப்பு

 
 
அந்த தொலைபேசியில் மிகவும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார். நான் திரும்பும் போது செயற்கையாக eeeeee என சிரித்தார். எனக்கு எதோ பிரச்சனை என புரிந்தது. ஆனால், அதை பெரிதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை.
 

ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என்று ரொம்ப சீரியசான விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். என்ன ஆவணங்கள்.. யாருடன் பேசிக்கொண்டிருந்தார் என்ற எந்த விபரமும் எனக்கு தெரியாது.

இப்படி ஒரு சம்பவம் நடக்கவும் தான் நான் இதனை எல்லாம் நியாபகப்படுத்தி சொல்கிறேன். இல்லையென்றால் இதனை நான் நினைவில் கூடவைத்திருக்க மாட்டேன். எதோ ஒரு பிரச்சனை என்று தெரிந்தது. ஆனால், வழக்கமாக எல்லோருக்குமே பிரச்சனை உள்ளது.. யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்றே கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
 
அப்படி நடு ராத்திரியில் அப்படி என்ன ஆவணத்தில் கையெழுத்து போட போற.. ஏதாவது லோன் போட்டிருக்கியா.. பேங்ல ஏதாவது கேட்டாங்களா என்றேன் அதற்கு சொல்றேன் சொல்றேன்.. இந்த ஷூட் முடிஞ்சதும் சொல்றேன் என்று கூறினார். நானும் கேஷுவலாக விட்டு விட்டேன்.என்று கூறியுள்ளார் சரண்யா.

இதனால், சித்ராவிற்கு திருமணம் தாண்டி அல்லது திருமணத்தினால் எதோ ஒரு பிரச்சனை இருந்துள்ளது. நிஜமாகவே இவரது மரணம் கொலையா..? தற்கொலையா..? என்ற கேள்வி நொடிக்கு நொடி வலுவடைந்து கொண்டே வருகின்றது.

VJ சித்ரா பேசிய கடைசி தொலைபேசி அழைப்பு இது தான்..! - திக் திக் தகவல்கள்..! VJ சித்ரா பேசிய கடைசி தொலைபேசி அழைப்பு இது தான்..! - திக் திக் தகவல்கள்..! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.