அதாம்லே வர்கீசு.. - M🔺STER-உடன் மோதல் குறித்து சிம்பு ஒரே போடு..!


கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. பாதிப்பு குறைந்த நிலையில் நவம்பர் மாதம் முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாததால் திரையரங்கு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். 
 
100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்றும் அதனால் தான் தங்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்தனர்.
 
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொது முடக்கம் காரணமாக வெளியாகவில்லை. 
 
ஓடிடியில் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் விஜய்யும் அவரது படக்குழுவினரும் திரையரங்கில் வெளியிடவே ஆர்வம் காட்டினர்.இந்நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரைப்பட ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.
 
மாஸ்டர் படத்துடன் நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படமும் வெளியாகி நேரடி மோதலில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் என்றும், மிக குறுகிய காலத்தில் ஈஸ்வரன் படம் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகதான் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 
மாஸ்டர் படம் முடிந்து ஒரு வருடம் ஆகியும், திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டும் என தியேட்டரில் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என்பதில் நடிகர் விஜய் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 
 
மேலும், திரையுலகு மீண்டும் செழிக்க, நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை எனது ரசிகர்களும், எனது ஈஸ்வரன் படத்தை விஜய் ரசிகர்களும் பார்க்க வேண்டும்.என ஒரே போடாக போட்டுள்ளார்.

அதாம்லே வர்கீசு.. - M🔺STER-உடன் மோதல் குறித்து சிம்பு ஒரே போடு..! அதாம்லே வர்கீசு.. - M🔺STER-உடன் மோதல் குறித்து சிம்பு ஒரே போடு..! Reviewed by Tamizhakam on January 03, 2021 Rating: 5
Powered by Blogger.