“கிளாமர் குயின்.. அழகு தேவதை..” – இணையத்தை கலக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை சுஜிதா..!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியலாகும்.

அண்ணன் தம்பி செண்டிமெண்ட் ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல் கூட்டுக்குடும்ப‌ சப்ஜெக்ட்டை முன்னிறுத்தும் விதமாக இருக்கும்.இதில் அண்ணியாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ்.

நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார் சுஜிதாவுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். சுஜிதா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சுஜிதா நடித்திருக்கிறார்.இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுதும் கவர்ச்சி காட்ட முடியாது என்று கூறி அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டதாக சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு சுஜிதா விற்கு திருமணமாகியது.

---- Advertisement ----

இந்நிலையில், வெள்ளை நிற உடையில் தேவதை போல அமர்ந்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

---- Advertisement ----